கொரோனா லாக்டவுன் நேரத்தில்.. நண்பர்களுடன் வீட்டில் சூதாட்டம்.. பிரபல நடிகர் ஷாம் திடீர் கைது!

By

சென்னை: வீட்டில் சூதாட்டம் நடத்தியதாக பிரபல நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

Recommended Video

நடிகர் Shaam சூதாட்டம் ஆடி கைது | நுங்கம்பாக்கம்

தமிழில், ஜீவா இயக்கிய 12 பி படம் மூலம் ஹீரோவானவர் ஷாம். தொடர்ந்து வசந்த் இயக்கிய ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே படத்தில் நடித்தார்.

இந்தப் படங்கள் கவனிக்கப்பட்டன. அடுத்து பிரியதர்ஷன் இயக்கிய, லேசா லேசா, ஜனநாதன் இயக்கிய இயற்கை உள்பட பல படங்களில் நடித்தார்.

தெலுங்கு, கன்னடம்

தெலுங்கு, கன்னடம்

ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, ஆர்யா, விஜய் சேதுபதியுடன் புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களிலும் நடித்துள்ள நடிகர் ஷாம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். ரவி தேஜாவின் கிக் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான ஷாம், கல்யாண்ராம் கதி, ஓசரவள்ளி, ஷேத்ரம், கிக் 2, அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்த ரேஸ்குர்ரம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பு

அடுக்குமாடி குடியிருப்பு

கன்னடத்தில் தனம் தனனம் படத்தில் அறிமுகமான ஷாம், கேம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கொரோனா காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், நடிகர், நடிகைகள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்டார்

இந்நிலையில் நடிகர் ஷாமின் வீட்டில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்றிரவு ஷாம் வீட்டிற்குச் சென்றனர். அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போக்கர் எனப்படும் இந்த சூதாட்டத்தில் பணத்தை வைத்து விளையாடப்படுவதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஜாமினில் விடுவிப்பு

ஜாமினில் விடுவிப்பு

இதனால், அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டன. பின்னர் அவர்கள் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து பல நாட்களாக நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் பலர் இது போன்று சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X