விஜய்யோட நடிக்க ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்... உறுதிப்படுத்திய ஷாம்
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி தற்போது வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனிடையே அவர் தனது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக பங்கேற்று வருகிறார். அவருக்கு இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாகியுள்ளார்.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூல்மழை பொழிந்து வருகிறது. 200 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது.

தளபதி 66 படம்
இந்நிலையில் தனது அடுத்தப் படமான தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக பங்கேற்று வருகிறார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாகியுள்ளார். வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தில் ராஜு படத்தை தயாரித்து வருகிறார்.

அப்பாவாக சரத்குமார்
இந்நிலையில் இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் படத்தில் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் என்றும் அதற்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

அண்ணனாக இணைந்த ஷாம்
முதலில் இந்தக் கேரக்டரில் நடிகர் மோகன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். இதையடுத்து நடிகர் ஷாம் இந்தக் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இதனிடையே இந்த தகவலை நடிகர் ஷாம் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

உறுதிப்படுத்திய ஷாம்
மேலும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பதை ஆவலுடன் தான் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக குஷி படத்தில் விஜய்யின் நண்பராக அறிமுகமான ஷாம், தொடர்ந்து 12பி, லேசா லேசா, இயற்கை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது மீண்டும் விஜய்யுடன் அவர் இணையவுள்ளார்.


Click it and Unblock the Notifications











