ஐதராபாத்தில் துவங்கிய தளபதி 66 சூட்டிங்... 22 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்!

ஐதராபாத் : தளபதி 66 படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தற்போது ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கியுள்ளது. இதற்கென நடிகர் விஜய் ஐதராபாத் சென்ற விமானநிலைய வீடியோக்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலானது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வசூல்சாதனையை அடுத்து படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்து மகிழ்ந்துள்ளார். அதன் புகைப்படத்தை படத்தின் இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். படத்தின் நாயகி அபர்ணா தாசும் படப்பிடிப்பின்போது விஜய் உள்ளிட்டவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்கில் பகிர்ந்திருந்தார்.

குடும்ப சென்டிமெண்ட்

குடும்ப சென்டிமெண்ட்

இந்நிலையில் விஜய் தற்போது தனது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் மிகவும் பிசியாகியுள்ளார். இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். குடும்ப சென்ட்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிவருவதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவரது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் 2வது கட்ட சூட்டிங்

ஐதராபாத்தில் 2வது கட்ட சூட்டிங்

இந்நிலையில் இந்தப்படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தற்போது இரண்டாவது கட்ட சூட்டிங் இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் துவங்கியுள்ளது. இதற்கென நடிகர் விஜய் ஐதராபாத் சென்ற நிலையில், அவர் விமானநிலையத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

Recommended Video

Beast | Vijayயின் தந்தை S.A.Chandrasekarரின் Open talk | அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
விஜய்யுடன் யோகிபாபு, ஷாம்

விஜய்யுடன் யோகிபாபு, ஷாம்

இந்தப் படத்தில் யோகிபாபு, ஷாம் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் இருவரும் தற்போது ஐதராபாத்தில் துவங்கியுள்ள சூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர். விஜய்யுடன் இருவருக்கும் உள்ள காம்பினேஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. நாயகி ராஷ்மிகா மந்தனாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

ஷாம் மகிழ்ச்சி

ஷாம் மகிழ்ச்சி

இந்நிலையில் நடிகர் ஷாம் தளபதி 66 படத்தில் இணைந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். தளபதி66 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக விஜய்யின் குஷி படத்தில் ஷாம் விஜய்யின் நண்பனாக நடித்துள்ள நிலையில் தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X