ஜனநாதனின் ‘புறம்போக்கு’: ஆர்யா–விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

சென்னை: ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'புரம்போக்கு' படத்தில் புதிய வரவாக நடிகர் ஷாம்-ம் சேர்ந்துள்ளாராம்.

யுடிவி நிறுவனம் தயாரிக்க, எஸ்.பி.ஜனநாதன் டைரக்டு செய்யும் படம் 'புறம்போக்கு'. இப்படத்தில் முதன்முறையாக ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்நிலையில் புதிதாக அந்த படத்தில், ஆர்யா-விஜய் சேதுபதியுடன் ஷாம் இணைகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாதன் படம்...

ஜனநாதன் படம்...

பொதுவாக ஜனநாதன் படம் என்றாலே சமூகத்திற்கு ஏதாவது கருத்துச் சொல்லும் படமாகத் தான் இருக்கும். இதற்கு உதாரணமாக அவரது முந்தைய படங்களான ஈ, பேராண்மை போன்றப் படங்களைச் சொல்லலாம்.

சமூகப்படம்...

சமூகப்படம்...

அந்தவகையில், தற்போது இயக்கி வரும் புறம்போக்கு படமும் சமூக சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை தானாம். அவருக்கு உறுதுணையாக இருக்கிறார், இன்னொரு இளைஞர். இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. இது தான் படத்தின் கதையாம்.

போலீஸ் அதிகாரியாக ஷாம்....

போலீஸ் அதிகாரியாக ஷாம்....

படத்தில் வரும் இரண்டு இளைஞர்களாக ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி நடிக்க, அந்த மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஷாம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தில்லாலங்கடி...

தில்லாலங்கடி...

ஏற்கனவே, தில்லாலங்கடி படத்தில் ஜெயம் ரவியைத் தேடி அலையும் மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் ஷாம் நடித்திருந்தார்.

நாயகியாக கார்த்திகா...

நாயகியாக கார்த்திகா...

இப்படத்தின் கதாநாயகியாக கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஷாம் என மூன்று நாயகர்கள் நடிக்கும் இப்படத்தில், கார்த்திகாவை தவிர வேறு கதாநாயகிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புத் துவக்கம்...

படப்பிடிப்புத் துவக்கம்...

ஜனவரி 14-ந் தேதி பொங்கல் அன்று குலுமனாலியில் படப்பிடிப்புத் தொடங்குகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், எஸ்.பி.ஜனநாதன்.

க்ளைமாக்ஸ் சென்னையில்...

க்ளைமாக்ஸ் சென்னையில்...

தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X