SK ரூ 100 கோடிகள் சம்பளம் வாங்கலாம்.. ஆனால் விஜய் ஆக முடியாது.. தளபதி விஜய்யின் ரீல் அண்ணா பளீச்!
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது அமரன் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், வசூல் மன்னனாக மாறி உள்ளார். இப்படியான நிலையில் அவர் குறித்து நடிகர் ஷாம் கூறியுள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கோட் படத்தில் விஜய் கையில் இருந்து சிவகார்த்திகேயன் துப்பாக்கியை வாங்கிய பின்னர் அவரது மார்க்கெட் மொத்தமாக மாறிவிட்டது. ஏற்கனவே அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்த நிலையில், விஜய்க்கு அடுத்து அந்த இடத்தில் சிவகார்த்திகேயன் தான் என பலரும் கூறினார்கள். காரணம் சிவகார்த்திகேயன் படம் என்றால் குடும்பத்துடன் பார்க்கலாம் என்கிற மனநிலை பொதுமக்கள் மத்தியில் இயல்பாகவே உள்ளது என, பலரும் கூறிவருகிறார்கள்.

அமரன் படம் உலகம் முழுவதும், ரூபாய் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததால், அஜித்தை விட பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த நடிகராக மாறிவிட்டார். இப்போது வசூலுல் முன்னணி இடத்தில் உள்ளவர்கள் என்றால், ரஜினி, கமல், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன்: இவரது நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படம், அவர் நடித்துக் கொண்டுள்ள படங்கள் என அனைத்தும், தமிழ் திரையுலகத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் அடுத்த வசூல் மன்னனாக சிவகார்த்திகேயன் உருவெடுத்து விட்டார். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்திற்கு கிட்டத்தட்ட ரூபாய் 70 கோடிகள் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு தகவல், பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் லாபத்தில் பங்கு என்ற கமிட்மெண்ட் க்குள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷாம்: இப்படியான நிலையில் நடிகர் ஷாம் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். இதில், " நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இன்னும் மேலும் மேலும் வளரலாம். அவரது சம்பளம் ரூபாய் 100 கோடிகளைக் கடக்கலாம். ஆனால் அவரால் ஒருபோதும் தளபதி விஜய் இடத்தை அடைய முடியாது. விஜய் அண்ணா இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.

தளபதி: சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. இதற்காக எல்லாம் சிவகார்த்திகேயன் அடுத்த தளபதி ஆகிவிட முடியாது" எனக் கூறியுள்ளார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் இது தொடர்பாக அமரன் மேடையில், தளபதி இடத்தை யாராலும் அடைய முடியாது. அந்த இடத்தை மக்கள் யாருக்கும் கொடுத்துவிட மாட்டார்கள் எனக் கூறினார். வாரிசு படத்தில் ஷாம் விஜய்யின் சகோதரனாக நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டு அதன் பின்னர் விலகியது பலருக்கும் தெரியும். இந்த படத்தில் தற்போது சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ப்ரித்வி, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படம் இந்த ஆண்டே ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











