ஷாமின் புது கெட்டப்.. பாகவதரே என பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ் !

சென்னை : சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் பெண்களின் கனவு கண்ணனாக இருந்து வந்த நடிகர் ஷாம் இன்று நெட்டிசன்களால் பங்கமாக கலாய்க்க பட்டு வருகிறார்.

12பி, லேசா லேசா, இயற்கை உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் தமிழ் திரைப் படங்களில் நடித்திருந்த ஷாம் தற்போது தனது செகண்ட் இன்னிங்சை தொடங்குவதற்காக காத்திருக்கின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஷாம் தற்போது, புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக அதை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பாலிவுட் ஹீரோ போல

பாலிவுட் ஹீரோ போல

நடிகர் விஜய் நடித்த குஷி திரைப்படத்தில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக வரும் ஷாம் இயக்குனர் ஜீவா இயக்கத்தில் வெளியான 12பி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். மீசையுடன் வலம் வந்த தமிழ் நடிகர்களுக்கு மத்தியில் மீசையில்லாமல் பாலிவுட் ஹீரோ போல செம ஸ்மார்ட்டாக பெண்களின் மனதை கவர்ந்து வந்த ஷாம் நடித்த முதல் திரைப்படத்திலேயே பலரின் மனங்களையும் கவர்ந்தார்.

தொடர் வெற்றி படங்கள்

தொடர் வெற்றி படங்கள்

12பி திரைப்படம் அனைவரையும் கவர்ந்து இருந்த நிலையில் ஷாமுக்கு அடுத்தடுத்த படங்கள் குவிய தொடங்க பல்வேறு இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அவ்வாறு இவர் நடிப்பில் வெளியான லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, ஏபிசிடி என பல தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.

மார்க்கெட் இல்லை

மார்க்கெட் இல்லை

இவ்வாறு தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்த ஷாம் அதற்குப் பின் பெரிதாக வெற்றி படங்கள் எதையும் கொடுக்க முடியாமல் தோல்வி படங்களையே கொடுத்து வந்ததால், தமிழில் மார்க்கெட்டை இழந்து தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிப்பிற்காக எந்த ஒரு கடுமையான முயற்சியையும் எடுக்க தயாராக இருந்த ஷாம், வி.இசட் துரை இயக்கிய 6 மெழுகுவர்த்திகள் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்க நினைத்த அவருக்கு அந்த திரைப்படமும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

செகண்ட் இன்னிங்சை

செகண்ட் இன்னிங்சை

இதற்கிடையில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் துணை கதாநாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷாம் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள "பார்ட்டி" திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்சை தொடங்க தற்போது முழுவீச்சில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

நியூ லுக்

நியூ லுக்

இதற்கிடையில் சமீபத்தில் சென்னையில் இருக்கும் அவரது வீட்டில் போலீசாரால் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது ஷாம் புதிய திரைப்படம் ஒன்றிற்கு தயாராகிவரும் நியூ லுக் தற்போது நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

நீண்ட கூந்தலுடன்

நீண்ட கூந்தலுடன்

நடிகர் ஆர்யா உடன் ஜிம்மில் கட்டுமஸ்தான உடம்பை காட்டியவாறு, போஸ் கொடுத்துள்ள ஷாம், பார்க்க மீசையில்லாமல் அந்தகாலத்து பாகவதர் போன்று நீண்ட கூந்தலுடன் இருக்கும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு நெட்டிசன்களால் தாறுமாறாக கலாய்க்கபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X