Shah rukh khan :பிடித்த விஜய்யின் படங்கள்.. ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான்!
மும்பை : நடிகர் ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் உருவாகிவரும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிப் போயுள்ளது.
ஜூன் மாதத்தில் ரிலீசாகவிருந்த இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் ஷாருக்கான் தன்னுடைய சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதில் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஷாருக்கானும் மிகவும் மன உளைச்சலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடித்த அட்லீ -விஜய் படங்கள் குறித்து பேசிய ஷாருக்கான் : நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் ஜவான். பதான் படத்தை தொடர்ந்து இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஷாருக்கானும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ளார். இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக நயன்தாராவும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதார்.
இந்தப் படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் போன்றவற்றிற்காக நடிகை நயன்தாரா அடிக்கடி மும்பைக்கு சென்றதை பார்க்க முடிந்தது. சமீபத்தில் அவர் படத்தின் டப்பிங் பணிக்காக மும்பைக்கு சென்றிருந்தார். அவரை மும்பை விமான நிலையத்தில் பார்க்க முடிந்தது. இந்தப் படத்தின்மூலம் இசையமைப்பாளராக அனிருத்தும் பாலிவுட் படங்களில் இணைகிறார். அட்லீ இயக்கத்தில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ரசிகர்களின் கேள்வி பதிலுக்கு ட்விட்டரில் பதிலளித்து பேசினார் ஷாருக்கான். அப்போது அட்லி அவரை தமிழில் பேசம்படி செய்தாரா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷாருக், அட்லி மற்றும் அனிருத் இணைந்து படத்தின் பாடல்களின் சில வரிகளுக்கு தன்னை வாயசைக்கும்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். இந்தப் படம் அட்லியின் இயக்கத்தில் வித்தியாசமான ஜானரில் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நயன்தாரா குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், நயன்தாரா மிகவும் லவ்லியானவர் என்றும் மிகவும் ஸ்வீட் மற்றும் ஆசம் என்றும் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவருடன் இணைந்து நடித்தது மிகுந்த உற்சாகத்தை கொடுத்ததாகவும் ஷாருக்கான் தெரிவித்தார். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் கடந்த ஆண்டில் நடைபெற்ற நயன்தாரா திருமணத்தில் ஷாருக்கான் கலந்துக் கொண்டார். தொடர்ந்து சென்னை வந்தபோது அவரது வீட்டிற்கு சென்றும் அவரை பார்த்தார்.

தொடர்ந்து அட்லியின் முந்தைய படங்களை ஷாருக்கான் பார்த்திருக்கிறாரா, எந்தப் படங்கள் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், விஜய் நடிப்பில் வெளியான அட்லியின் தெறி மற்றும் மெர்சல் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மிகவும் எளிமையானவர் என்றும் அவரிடம் தான் அதிகமாக கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











