Shah rukh khan: மீண்டும் இணையும் ஜவான் கூட்டணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் கடந்த செப்டம்பர் மாதத்தில் சர்வதேச அளவில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1100 கோடிகளை வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.

ஷாருக்கானின் கேரியரில் அதிகமாக வசூலித்தப்படம் என்ற பெருமைக்குள்ளாகியுள்ளது ஜவான் படம்.
நடிகர் ஷாருக்கான்: நடிகர் ஷாருக்கான் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டவராக உள்ளார். இவரது அடுத்தடுத்தப்படங்கள் ரசிகர்களின் அதிகமான விருப்பத்திற்குள்ளாகி வரும் நிலையில் சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் வெளியாகாமல் ரசிகர்களின் பொறுமையை அதிகமாக சோதித்தது. அதற்கெல்லாம் ஈடுசெய்யும் வகையில் இந்த ஆண்டிலேயே அவரது அடுத்தடுத்த 3 மூன்று படங்கள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்வகையில் வெளியாகிறது.
பதான் படம்: கடந்த ஜனவரியில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியது. இதனிடையே அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படம் கடந்த செப்டம்பரில் ரிலீசானது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, யோகிபாபு, ப்ரியா மணி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் தற்போது 1100 கோடி ரூபாய் கலெக்ஷனை குவித்துள்ளது.
ஜவான் படம்: பாலிவுட் பாட்ஷாவாக ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் செய்துவரும் ஷாருக்கானின் கேரியரில் அதிகமாக வசூலித்த படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது. தற்போது இந்தப் படம் ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் ரிப்பீட்டட் ஆடியன்சை பெற்ற ஜவான் படம், ஓடிடியிலும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. ஓடிடியிலும் அதிகமான பார்வைகளை இந்தப் படம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் இணையும் கூட்டணி: இதனிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஷாருக்கான் -அட்லீ கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கான் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது துன்கி படம் ரிலீசாகவுள்ளது. இந்த ஆண்டிலேயே மூன்று படங்களை ரிலீஸ் செய்யவுள்ள ஷாருக்கான், தன்னுடைய சொந்த பிரச்சினைகளில் இருந்து விலகி, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
மீண்டும் 1000 கோடி வசூல்?: இந்நிலையில் தன்னுடைய கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு ஷாருக்கான், அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் இணையவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்களின் கூட்டணியில் வெளியான ஜவான் படம் 1100 கோடி ரூபாய்களை வசூலித்துள்ள நிலையில், அடுத்ததாக இவர்களின் கூட்டணியில் உருவாகும் படமும் மீண்டும் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











