Shah rukh khan: தளபதி விஜய் மாதிரி என்னால முடியாது.. வெளிப்படையாக சொன்ன ஷாருக்கான்!
சென்னை: நடிகர் ஷாருக்கான் பதான் படம் 1000 கோடி ரூபாய்களை வசூலித்த நிலையில், அடுத்ததாக அவரது ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில் படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தளபதி விஜய் மாதிரி தன்னால் முடியாது என கூறிய ஷாருக்கான்: நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த ஜனவரியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டடித்தது. ஷாருக்கான் தன்னுடைய சொந்த பிரச்சினைகளால் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் படங்கள் எதிலும் நடிக்காத நிலையில், வெளியான பதான் படத்தை கொண்டாடினார்கள். ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் நடிப்பில் இந்தப் படம் வெளியாகி 1000 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தியில் ஷாருக்கானின் ஜவான் படம் வெளியாகவுள்ளது. படத்தை அட்லி இயக்கியுள்ள நிலையில், தமிழில் இருந்து நயன்தாரா மற்றும் அனிருத் இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். அனிருத் இசையில் படத்தின் அடுததடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இரண்டாவது மற்றும் மூன்றாவது பாடல்களில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.
இந்நிலையில் தமிழ் ரசிகர்களை கவரும்வகையில் இன்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்று வருகிறது. பிற்பகல் மூன்று மணியளவிலேயே இந்த நிகழ்ச்சி சிறப்பான ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் களைகட்டியது. அனிருத், பிரியா மணி என இணைந்து தனித்தனியாக ஷாருக்கான் மேடையேறி தன்னுடைய கலக்கல் ஆட்டத்தை போட்டார். அவரது ஆட்டத்தை தமிழ் ரசிகர்களும் சிறப்பாக என்ஜாய் செய்தனர்.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் பேச்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எப்போதுமே ஷாருக்கானின் பாடல்களில் சிறப்பான நடனத்தை வெளிப்படுததுவார். அவரது நடனம் பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் மிகச்சிறப்பான ரசிகர்களை அவருக்க கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் ஷோபி மாஸ்டரிடம் மிகவும் கடினமான டான்ஸ் ஸ்டெப்ஸ்களை தனக்கு கொடுக்க வேண்டாம் என்று கூறியதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் போல தன்னால் டான்ஸ் செய்ய முடியாது என்றும் தான் ஷோபி மாஸ்டரிடம் கூறியதாகவும் ஷாருக்கான் தெரிவித்தார். இதையடுத்து கூட்டத்தினரின் கரகோஷம் அடங்க வெகுநேரம் பிடித்தது. எப்போதும் தன்னுடைய நடனத்திற்கு பெயர்போன ஷாருக்கான், இந்த விழா மேடையிலேயே பிரியா மணி, அனிருத் ஆகியோருடன் இணைந்து ஆட்டம் போட்டார். இந்நிலையில் அவர் தன்னுடைய நடனத்தை விஜய்யுடன் ஒப்பிட்டு பேசியது அனைவரையும் கவர்ந்தது.


Click it and Unblock the Notifications











