விஜய் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் கொடுக்கும் தலைவலி.. ஷாருக்கான் வைத்த கோரிக்கை!
மும்பை: நடிகர் ஷாருக்கான் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு வருகிறார். கடந்த 2023ம் ஆண்டில் மட்டுமே பதான், ஜவான், டுங்கி என மூன்று படங்கள் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகின. முன்னதாக தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக சில ஆண்டுகள் இவரது படங்கள் வெளியாகாத நிலையில் ஒரே ஆண்டில் மூன்று படங்களில் நடித்து மாஸ் காட்டினார்.
அடுத்தடுத்த பிராஜெக்ட்களில் தன்னை இணைத்து வருகிறார் ஷாருக்கான். தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த 1000 கோடி ரூபாய் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளை கடந்து இவர் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழிலும் கமலுடன் இணைந்து நேரடி தமிழ் படமான ஹே ராம் படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் பாட்ஷா: நடிகர் ஷாருக்கான் பாலிவுட் பாட்ஷாவாக கொண்டாடப்படுபவர். 30 ஆண்டுகளை கடந்த போதிலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக தொடர்ந்து இருந்து வருகிறார். இந்தியில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் ஷாருக்கான், தயாரிப்பாளராகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில், தயாரிப்பில் அடுத்தடுத்த படங்கள் 1000 கோடி கிளப்பில் இணைந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படமும் 1000 கோடிகளை தாண்டி வசூலித்தது.
குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சி: அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் ஷாருக்கான், துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடினார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் குறித்து பேசிய ஷாருக்கான் அவர்கள் செய்யும் செயல் தன்னை கஷ்டப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தென்னிந்திய நடிகர்களுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர்களிடம் கோரிக்கை: தனக்கு அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம்சரண், யஷ், மகேஷ்பாபு, ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் நண்பர்களாக உள்ளதாக அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார். அவர்களிடம் ஒரு கோரிக்கை வைப்பதாகவும், அவர்கள் வேகமாக நடனமாடுவதை நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ள ஷாருக்கான், அவர்களுக்கு சமமாக ஆடுவது தனக்கு கஷ்டமாக உள்ளதாகவும் ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய அடுத்தப்படம் குறித்தும் அவர் பேசியுள்ளார். கடந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் எந்தப்படமும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
பதான் இயக்குநருடன் அடுத்தப்படம்: இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான், தன்னுடைய அடுத்தப்படத்தை பதான் பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப்படம் குறித்து மேலும் தகவல்களை வெளியிட வேண்டாம் என்று சித்தார்த் தன்னிடம் கூறியுள்ளதாகவும் அதனால் அடுத்தடுத்த அப்டேட்களை கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ள ஷாருக்கான், ஆனால் இந்தப்படம் ரசிகர்களை அதிகமாக என்டர்டெயின் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications