Shah rukh khan: அனிருத் என் மகன் மாதிரி.. ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் உருகிய ஷாருக்கான்!

சென்னை: நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில் வரும் செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். தென்னிந்திய அளவில் கலக்கிவந்த அனிருத் தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார்.

இதேபோல இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா. படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார் விஜய் சேதுபதி.

Actor Shah rukh khan says that Anirudh is like his son in Jawan pre release function

அனிருத் தன்னுடைய மகன் போன்றவர் என ஷாருக்கான் நெகிழ்ச்சி: இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான நடிகர் ஷாருக்கானின் பதான் 1000 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்தப் படம் ஷாருக்கான் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ஷாருக்கானின் படத்திற்காக வெயிட் செய்துவந்த ரசிகர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடாகவும் இந்தப் படம் அமைந்தது. இந்நிலையில் 4 ஆண்டுகள் காத்திருந்தது போதும் என்று கூறும் வகையில் இந்த ஆண்டிலேயே ஷாருக்கானின் அடுத்தப்படம் வெளியாகவுள்ளது.

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த 3 பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ஷாருக்கனின் அறிமுக பாடல், மிகவும் சிறப்பாக அமைந்தது. தமிழில் இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். டப்பிங் பாடலைப் போல உள்ளதாக இந்தப் பாடல் விமர்சனங்களை பெற்றது.

Actor Shah rukh khan says that Anirudh is like his son in Jawan pre release function

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியான நிலையில், படத்தின் ப்ரமோக்களும் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. நாளைய தினம் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக ஷாருக்கான் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் சென்னையில் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகர் நடிகைகள் பங்கேற்று சிறப்பித்தினர். நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான், தமிழில் இயக்குநர் அட்லிக்கு நன்றி தெரிவித்தார். ஆங்கர் பாவனாவின் துணையுடன் தமிழில் மரண மாஸ் அட்லிக்கு நன்றி என்று அவர் கூறியது ரசிகர்களை அதிகமாக உற்சாகப்படுத்தியது. இதையத்து, ஷாருக்கானுக்கு எழுந்து நின்று இயக்குநர் அட்லி நன்றி தெரிவித்தார்.

இதையடுதது தொடர்ந்து பேசிய ஷாருக்கான், அனிருத்தின் இசைக்கு மிகுந்த பாராட்டுக்களை தெரிவித்தார். அவர் தனது மகன் போன்றவர் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார். அவரது why this kolaveri பாடலில் இருந்தே அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அட்டகாசமான விஜய் சேதுபதி என்றும் அவர் பாராட்டினார். தன்னுடைய வாழ்நாளில் தான் ஒரு படத்திற்காக தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றதில்லை என்றும் அவர் தொடாந்து பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X