Jawan: சரியா ஒரு மாதம்தான் இருக்கு.. ஜவான் மிரட்டல் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்!

மும்பை: நடிகர் ஷாருக்கானின் பதான் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

Actor Shah rukh khan shares new poster of Jawan movie in his twitter page

தற்போது படத்தின் புதிய போஸ்டரை நடிகர் ஷாருக்கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்னும் சரியாக ஒரே மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

ஜவான் பட மிரட்டல் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்: நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ஷாருக்கானின் இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டி வசூல் சாதனை செய்தது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டவர்கள் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருந்தனர். ஆக்ஷன் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த நிலையில், அடுத்த மாதத்தில் ஷாருக்கானின் ஜவான் படம் ரிலீசாகவுள்ளது.

கடந்த ஜூன் மாதத்திலேயே ஜவான் படம் ரிலீசாகவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப் போனது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, யோகிபாபு, விஜய் சேதுபதி, பிரியா மணி உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அனிருத் மற்றும் நயன்தாரா இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

ஜவான் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அந்த மொழிகளில் படத்தின் பர்ஸ்ட் லுக் பாடலும் வெளியானது.

Actor Shah rukh khan shares new poster of Jawan movie in his twitter page

இந்நிலையில் சில தினங்களில் படத்தின் அடுத்தப்பாடலும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாடல் ஷாருக்கானின் அறிமுக பாடலாக அமைந்த நிலையில், அடுத்ததாக ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் ரொமான்ஸ் பாடலாக, மெலடி பாடலாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தொடர்ந்து ட்விட்டரில் நயன்தாரா ட்ரெண்டிங்கில் உள்ளார். இதனிடையே படத்தின் புதிய போஸ்டரை ஷாருக்கான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய போஸ்டரில் மொட்டை அடித்தபடி காணப்படுகிறார் ஷாருக்கான். தான் இந்த லுக்கில் எப்படி இருக்கிறேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் படம் சரியாக இன்னும் ஒரு மாதத்தில் ரிலீசாகவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். ஷாருக்கான் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், படத்தை கொண்டாடுவதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படம் கண்டிப்பாக 1500 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X