Jawan 2nd single: ஹய்யோடா.. ஜவான் படத்தின் 2வது சிங்கிள்.. க்யூட் ப்ரமோவுடன் ஷாருக்கான் அப்டேட்!

சென்னை: நடிகர் ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின்மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மேலும் படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Actor Shah Rukh khan updates and released promo of his 2nd single in Jawan movie

இந்தப் படத்தின்மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அவரது இசையில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜவான் படத்தின் 2வது பாடல் குறித்து ஷாருக்கான் அப்டேட்: நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் ஹிட்டையும் கொடுத்துள்ளது. இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1000 கோடிகளுக்கும் மேல் வசூலித்து பாலிவுட்டில் எப்போதுமே ஷாருக்கான் கிங் தான் என்பதை மீண்டும் நிரூபித்தது. ஆக்ஷன் ஜானரில் வெளியான இந்தப் படம் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியானது.

நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டதாலோ என்னவோ, தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரே ஆண்டில் அடுத்தடுத்த படங்களை கொடுக்கவுள்ளார் ஷாருக்கான். அட்லீ இயக்கத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதி ஷாருக்கானின் அடுத்தப்படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் அட்லீ. மேலும் இந்தப் படத்தின்மூலம் நடிகை நயன்தாராவும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்திலேயே ஜவான் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. படத்தின் ட்ரெயிலர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது. தமிழில் வந்த இடம் என் காடு, நீதான் என் பலியாடு என்ற லிரிக்குடன் வெளியான இந்தப் பாடலை அனிருத் பாடியிருந்தார்.

இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து யூடியூபில் பல லட்சம் வியூஸ்களை பெற்று மாஸ் காட்டி வருகிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் அடுத்த சிங்கிள் குறித்த அறிவிப்பை தற்போது ஷாருக்கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹைய்யோடா என துவங்கும் இந்தப் பாடலின் ப்ரமோவை தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா க்யூட்டாக நடனமாடுகின்றனர்.

இந்த ப்ரமோக்கள் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ளன. பாடலை தமிழில் விவேக் எழுதியுள்ளார். ஜவானின் காதல் பாடலாக உருவாகியுள்ள இந்தப் பாடல் வரும் திங்கட்கிழமை வெளியாகவுள்ளதாக ஷாருக்கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அனிருத் இந்தப் பாடலில் மேஜிக் செய்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இதனிடையே இந்த ப்ரமோ வெளியாகி ஒரே மணிநேரத்தில் 5.6 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. இந்தப் பாடலின் முழுமையான பதிவை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X