Jawan: அனல் தெறிக்கும் ஜவான் படத்தின் Zinda banda பாடல்.. ஒரே நாளில் 36 மில்லியன் வியூசா!

மும்பை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, பிரியா மணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான்.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் மூலம் அனிருத் இந்தியிலும் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்துள்ளார்.

Actor Shah rukh khans Jawan movie first single gets 36 Million views in just one day

முன்னதாக ஜூன் 3ம் தேதி ஜவான் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்திற்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

மாஸ் காட்டும் நடிகர் ஷாருக்கானின் ஜவான் பட பாடல்: நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரது ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள நிலையில், முன்னதாக ஜூன் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியா மணி, யோகிபாபு உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்களும் இணைதுள்ளனர். படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகவுள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். இந்தப் படத்தின்மூலம் அவர் பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார்.

Actor Shah rukh khans Jawan movie first single gets 36 Million views in just one day

ஷாருக்கான் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் தீபிகா படுகோன் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் முன்னதாக வெளியான பதான் படத்தில் ஷாருக்கானின் ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் விஜய் சேதுபதி ஷாருக்கானுக்கு வில்லனாகியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. தமிழில் வந்த இடம் என்று துவங்கும் இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றது. அனிருத் பாடியுள்ள போதிலும் டப்பிங் பாடல் போல இந்தப் பாடல் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே பாலிவுட்டில் இந்தப் பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. Zinda banda என்று துவங்கும் இந்தப் பாடல் ஒரே நாளில் 36 மில்லியன் வியூஸ்களை பெற்று மாஸ் காட்டியுள்ளது. யூடியூபிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தப் பாடலில் ஷாருக்கானின் நடனம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பர்ஸ்ட் சிங்கிளே மிகவும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கானின் பதான் படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்தது. இந்நிலையில் சில மாதங்களிலேயே வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக வெளியான படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இதனால் இந்தப் படம் 1500 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X