Jawan: 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஜவான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சென்னை: நடிகர் ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
முன்னதாக வெளியான ஷாருக்கானின் பதான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், ஜவான் படமும் அதை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தினை தயாரித்துள்ள ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

1000 கோடி கலெக்ஷனை நெருங்கிய ஜவான் படம்: நடிகர் ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படம் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியா மணி, யோகி பாபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சர்வதேச அளவில் வசூல்மழையை பொழிந்து வருகிறது. முன்னதாக கடந்த ஜனவரியில் வெளியான ஷாருக்கானின் பதான் படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஜவான் படம் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. விரைவில் படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், தினந்தோறும் படத்தின் கலெக்ஷன் குறித்த அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினமும் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் குறித்து ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தியில் ஜவான் படம் வெளியான நிலையில், வட இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கானின் அட்ராக்ஷன் மற்றும் படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்புகள், ரசிகர்களை தொடர்ந்து திரும்ப திரும்ப திரையரங்குகளுக்கு வரவழைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக, எந்தவிதமான அதிகமான போட்டிகளும் இல்லாமல் சோலோவாக வெற்றிநடை போட்டு வருகிறது ஜவான்.

இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் 937.61 கோடிகள் என தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் படத்திற்கான டிக்கெட்டுகளை புக் செய்யவும் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து நாளையோ நாளை மறுநாளோ இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக தொடர்ந்து நான்கு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான பதான் மற்றும் இந்த மாதம் வெளியாகியுள்ள ஜவான் படங்கள், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. சரிந்திருந்த பாலிவுட் மார்க்கெட்டை தன்னுடைய படங்கள் மூலம் ஷாருக்கான் மீண்டும் தூக்கி நிறுத்தியுள்ளதாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் மிகுந்த உற்சாகத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறார் ஷாருக்கான்.


Click it and Unblock the Notifications











