Shah Rukh Khan: ஜவான் படத்தின் அடுத்த போஸ்டர்.. வயதான லுக்கில் விஜய் சேதுபதி!
மும்பை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ஜவான். கடந்த ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவிருந்தது.
தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் ரிலீசாகவுள்ளது.
தமிழில் தன்னுடைய மாஸை நிரூபித்த இயக்குநர் அட்லீ, ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஜவான் படத்தின் புதிய போஸ்டரில் வயதான லுக்கில் விஜய் சேதுபதி: நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளால் படங்களில் நடிக்காமல் இருந்த ஷாருக்கான் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பதான் படம் வெளியானது. தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருந்தனர். படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
படம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளது ஜவான். இந்தப் படத்தை பிரபல தமிழ்ப்பட இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். படத்தில் நயன்தாரா, யோகிபாபு, பிரியா மணி, விஜய் சேதுபதி என தமிழ் நடிகர்கள் இணைந்துள்ளனர். அனிருத் இந்தப் படத்தின்மூலம் இசையமைப்பாளராக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
படத்தின் ட்ரெயிலர், பர்ஸ்ட் சிங்கிள், போஸ்டர்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் இந்த மொழிகளில் வெளியானது. ஷாருக்கானின் இன்ட்ரோ சாங்காக இந்தப் பாடல் அமைந்திருந்தது. தமிழில் இந்தப் பாடலை அனிருத்தே பாடியிருந்தார். இந்நிலையில் அடுத்ததாக ஷாருக்கான் -நயன்தாராவின் மெலடி நம்பரும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் அடுத்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி என மூவரும் இடம்பெற்றுள்ளனர். ஷாருக்கான் அழுத்தமான பார்வையுடன் காணப்படும் நிலையில், நயன்தாரா துப்பாக்கியை வைத்து சுடுவதாக காணப்படுகிறார். இதனிடையே விஜய் சேதுபதியின் லுக் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த போஸ்டரில் வயதான லுக்கில் விஜய் சேதுபதி காணப்படுகிறார். ட்ரெயிலரில் இளமையான தோற்றத்தில்தான் காணப்பட்டார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இந்த போஸ்டரில் அவர் வயதான லுக்கில் உள்ளார். இதனால் இருவேறு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது ஒரே கேரக்டரில் இளமையான மற்றும் வயதான கெட்டப்பில் அவர் வருகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷாருக்கான், பயங்கரமான கேரக்டர் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











