Jawan 2nd trailer: சென்னையில் நடக்கும் ஜவான் படத்தின் 2வது ட்ரெயிலர் ரிலீஸ்.. விஜய் பங்கேற்பு?

சென்னை: நடிகர் ஷாருக்கானின் பதான் படம் வசூலில் மாஸ் காட்டிய நிலையில், வரும் செப்டம்பர் 9ம் தேதி அவரது ஜவான் படம் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் பிரமோஷன்களை கடந்த சில வாரங்களாக படக்குழு துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார் நயன்தாரா. படத்தின் ட்ரெயிலர், இரண்டு பாடல்கள் என அடுத்தடுத்த வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Actor Shah rukh khans Jawan movie second trailer to be release in Chennai

ஷாருக்கானின் ஜவான் படத்தின் இரண்டாவது ட்ரெயிலர்: நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த ஜனவரியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்தப் படத்தின் மூலம் தொய்வடைந்திருந்த பாலிவுட்டை ஷாருக்கான் மீட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின்மூலம் கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா, பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அவருடன் யோகிபாபு, விஜய் சேதுபதி, பிரியா மணி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். அவரது இசையமைப்பில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களும் மூன்று மொழிகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழில் வெளியான பாடல்கள் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது. தமிழில் வெளியான முதல் பாடலை அனிருத் பாடியுள்ள நிலையிலும் டப்பிங் பாடலை போல இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜவான் படத்தின் இரண்டாவது ட்ரெயிலரை சென்னையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இரண்டாவது ட்ரெயிலர் வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டாவது ட்ரெயிலரில் ஷாருக்கானின் ப்ளாஷ்பேக் காட்சிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அட்லீ இயக்கத்தில் உருவான ராயப்பன், வெற்றிமாறன் கேரக்டர்களை இந்த கேரக்டர் பிரதிபலிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிளாஷ்பேக் காட்சிகள் படத்தின் வெற்றிக்கு பெரிதாக துணைக்கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசையில் படத்தின் அதிரடி மற்றும் மெலடி என இரு பாடல்கள் வெளியான நிலையில், ரிலீசுக்கு முன்னதாக மேலும் இரு பாடல்கள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பதான் படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், ஜவான் படம் அந்த ரெக்காட்டை பீட் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1500 கோடி ரூபாய்களை இந்தப் படம் கலெக்ட் செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜவான் படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்து தற்போது வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ளார் விஜய். இதையடுத்து நாடு திரும்பும் அவர் லியோ இசை வெளியீட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து தளபதி 68 படத்திலும் இணையவுள்ளார். இந்நிலையில் ஜவான் படத்தின் 2வது ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய் மற்றும் ஷாருக்கான் இடையில் சிறப்பான நட்பு காணப்படுகிறது. ஜவான் சூட்டிங்கிற்காக சென்னை வந்த அவர், விஜய்யை சூட்டிங் ஸ்பாட்டில் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X