Shah rukh khan: ஷாருக்கான் -நயன்தாரா க்யூட் கெமிஸ்ட்ரி.. வெளியானது ராமைய்யா வஸ்தாவய்யா பாடல்!

மும்பை: நடிகர் ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படம் சர்வதேச அளவில் வரும் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

படத்தில் நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்களும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளனர்.

Actor Shah rukh khans Jawan movie third single released

இந்தப்படத்தின்மூலம் இசையமைப்பாளர் அனிருத் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். வரும் 30ம் தேதி படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெறவுள்ளது.

ஷாருக்கானின் ஜவான் பட பாடல் வெளியீடு: நடிகர் ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படம் சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஷாருக்கானின் பதான் படம் 1000 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், ஜவான் 1500 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் அட்லி, இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள நிலையில், அவரது முதல் படமே ஷாருக்கானுடன் அமைந்துள்ளது.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின்மூலம் நடிகை நயன்தாரா, யோகிபாபு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் தங்களது என்ட்ரியை கொடுக்கவுள்ளனர். அனிருத் இசையில் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இன்றைய தினம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ராமைய்யா வஸ்தாவய்யா என்ற இந்தப் பாடலில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இரண்டாவது சிங்கிளிலும் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது. தான் ஏற்கும் கேரக்டருக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளும் சிறப்பை கொண்டவர் நயன்தாரா. அவரை பாலிவுட் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜவான் படம் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது ராமைய்யா வஸ்தாவய்யா பாடலையும் இந்த மொழிகளில் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். இது ஜவானின் பண்டிகை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடலில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ள நிலையில், படத்தில் அவர்களது ஜோடி எப்படி அமைந்திருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஷாருக்கான் எப்போதுமே பாலிவுட் பாட்ஷாவாக ரசிகர்களை கவர்ந்து வருபவர். அவரது படங்களுக்கு எப்போதுமே சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு காணப்படும். அந்த வகையில் ஜவான் படத்திற்கு மிகச்சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. இந்தப படத்தின் இசை வெளியீடு நாளைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தொடர்ந்து படத்தின் ட்ரெயிலரும் வெளியாகவுள்ள நிலையில், இந்த ட்ரெயிலர் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபாவில் வெளியாகவுள்ளதாகவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X