Pathaan 2: விரைவில் பதான் 2.. சூட்டிங் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

மும்பை: நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான படம் பதான்.

தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக 4 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சித்தார்த் ஆனந்த்.

Actor Shah rukh khans Pathaan movie part 2 is on cards

சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபீசில் ஹிட்டடித்தது பதான். இந்தப் படம் 1000 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து பட்டையை கிளப்பியது..

பதான் 2 படத்தின் அறிவிப்பிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்: நடிகர் ஷாருக்கான், பாலிவுட் பாட்ஷாவாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவரது நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்தது. தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக 4 ஆண்டுகளாக ஷாருக்கான் படங்களில் கவனம் செலுத்தவில்லை. இதனிடையே கடந்த ஜனவரி 25ம் தேதி சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் வசூல் சாதனை புரிந்தது.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் போன்றவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை ரசிகர்களிடையே உற்சாகமாக பகிர்ந்துக் கொண்டார் ஷாருக்கான். கடந்த 4 நாட்களின் இடைவெளியை படத்தின் 4 நாட்கள் மறக்க செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் படம் வெளியான 5 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை பெற்றது.

படம் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த பாகுபலி 2 மற்றும் கேஜிஎப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து, பாலிவுட்டில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை படக்குழுவினருக்கு ஈட்டித் தந்தது. இந்தப் படம் சரிந்திருந்த பாலிவுட் திரையுலகை தூக்கி நிறுத்திவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. படம் 5 வாரங்களில் 1026 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தது. இந்தியில் மட்டுமே ஏறக்குறைய 529 கோடி ரூபாய் வசூலை பெற்றது. கடந்த 2017ம் ஆண்டில் இந்தியில் வெளியான பாகுபலி படம் 510 கோடி ரூபாய் வசூலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Actor Shah rukh khans Pathaan movie part 2 is on cards

இதனிடையே இந்தப் படத்தின் ரிலீசின்போதே, பதான் 2 படம் உருவானால் அதில் நடிப்பதற்கு பெருமை படுவேன் என்று ஷாருக்கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் அடுத்த மாதத்தில் ஜவான் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அந்தப் படத்தை தொடர்ந்து பதான் 2 படத்தில் ஷாருக்கான் கமிட்டாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்ததாக ஷாருக்கானின் ஜவான் படம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் பாடல் வெளியானது. அனிருத் இசையில் பாடல், ரசிகர்களை வெகவாக கவர்ந்தது. நயன்தாரா, பிரியா மணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படம் கண்டிப்பாக 1500 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X