Shah Rukh khan: என்னது குழந்தைக்கு கோ புரொடக்ஷனா.. முகம் சுளிக்க வைத்த ஷாருக்கான் பேச்சு!

சென்னை: நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இதையொட்டி நேற்றைய தினம் சென்னையில் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான் உள்ளிட்ட படக்குழு கலந்துக் கொண்டது. நிகழ்ச்சியில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, பிரியா மணி உள்ளிட்டவர்களின் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Actor Shah rukh khans speech about Atlee -Priya child makes controversies

அட்லீ -ப்ரியா குழந்தை குறித்து ஷாருக்கான் பேச்சு: நடிகர் ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே தெறிக்கும் ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இன்றைய தினம் உலகின் உயரமான புர்ஜ் கலிபாவில் படத்தில் ட்ரெயிலர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தமிழ் ரசிகர்களை கவரும்வகையில் நேற்றைய தினம் சென்னையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, அனிருத், அட்லீ, பிரியா மணி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு, ரசிகர்களிடையே பேசினர். தன்னுடைய ப்ரமோஷனுக்கான விழாவிற்காக தான் தமிழ்நாட்டில் கலந்துக் கொள்வது இதுதான் முதல் முறை என்று ஷாருக்கான் உற்சாகம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் ஷாருக்கானின் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஜவான் குறித்து, அனிருத், விஜய் சேதுபதி, அட்லீ, நயன்தாரா குறித்தும் ஷாருக்கான் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டு பேசினார். அட்லீயை தமிழில் மரண மாஸ் அட்லீ, நன்றி என்றும் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விஜய் குறித்தும் அவர் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டு பேசியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. விஜய் போல தனக்கு நடனம் ஆட வராது என்று ஷோபி மாஸ்டரிடம் தான் கூறியதாகவும் ஷாருக்கான் தெரிவித்தார்.

Actor Shah rukh khans speech about Atlee -Priya child makes controversies

நிகழ்ச்சியில் அட்லீயின் மனைவி பிரியாவும் கலந்துக் கொண்டார். அட்லீ தன்னுடைய திரையுலக வாழ்க்கை குறித்து பேசியபோது அவர் கண்கலங்கியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான், பிரியா நான் உங்களிடம் தனியாக பின்னர் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, நாம் இன்னொரு குழந்தையை புரொட்யூஸ் செய்யலாம் என்று அவர் கூறியதைக் கேட்டு கூட்டத்தினர் ஷாக் ஆனார்கள்.

உடனடியாக, நீங்களும் அட்லீயும் இணைந்துதான் குழந்தையை புரொட்யூஸ் செய்ய வேண்டும், நான் அல்ல என்று ஷாருக்கான் பேசினார். இதைக்கேட்டு பிரியா விழுந்து விழுந்து சிரித்தார். இதோடு நிறுத்தாமல், நான் கோ புரொட்யூஸ் செய்யலாம். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை, நண்பர்கள் தானே என்றும் கூறினார். இதனால் கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. ஜவான் படம் வரும் 7ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X