கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி

Recommended Video

Actor Harish Kalyan: ஆந்திராவில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்ற ஹரீஷ் கல்யாண் நடித்த ஜெர்சி

மும்பை: இயக்குநர் கவுதம் தின்னானுரி இயக்கத்தில் நடிகர் நானி நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ஜெர்சி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் சாகித் கபூர் நடிக்கப்போவதாக பாலிவுட் சினிமா வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்கப்போவதும் கவுதம் தின்னானுரி தான். இப்படம் கிரிக்கெட்டில் தோற்ற ஒருவனின் வாழ்க்கையை மையக் கதையாய் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும்.

பாலிவுட் நடிகர் சாகித் கபூர் கடைசியாக அர்ஜுன் ரெட்டி பட ரீமேக்கில் கபீர் சிங் படத்தில் கியாரா அத்வானிக்கு ஜோடியாக நடித்தார் இந்த படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அர்ஜீன் ரெட்டி படம் தான் விஜய் தேவரகொண்டாவை தென்னிந்திய சினிமாவில் மிக பெரிய நடிகர் ஆக்கியது.

Actor Shahid Kapoor Acts in Jersey Hindi Remake

அந்த பட தமிழ் ரீமேக்கில் தான் தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இந்த அர்ஜுன் ரெட்டி படம் இவ்வளவு பெரிய வெற்றி அடையக் காரணம் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.

சாகித் கபூர் பாலிவுட்டின் மிக அற்புதமான நடிகர். அவர் ர..ராஜ்குமார், ஆக்சன் ஜாக்சன் போன்ற கமர்சியல் படங்களிலும் நடித்துள்ளார். ஹைடர், உட்தா பஞ்சாப், பத்மாவத் போன்ற கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதாபாத்திரங்களை கொண்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் 6 ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வாங்கி உள்ளார்.

தற்போது அர்ஜுன் ரெட்டி படத்தை தொடர்ந்து சாகித் கபூர் மற்றொரு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். அது தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த ஜெர்சி படம். ஜெர்சி திரைப்படத்தில் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் கிரிக்கெட்டில் தோற்ற ஒருவனின் வாழ்க்கையை மையக் கதையாய் கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்த படம் நானிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. நானியை அதுவரை நாம் கமெர்சியல் படங்களில் மட்டுமே பார்த்து இருந்தோம்.

தெலுங்கில் பல்வேறு கமர்சியல் படங்களில் நடித்த நானியை நாம் ஜெர்சி படத்தில் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் நடிப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார் என்பதற்கு ஜெர்சி படமே அத்தாட்சி. ஜெர்சி படத்தை இயக்கியவர் கவுதம் தின்னானுரி.

அந்த படத்தின் இந்தி ரீமேக்கில், தற்போது சாகித் கபூர் நடிக்கவிருப்பது பாலிவுட் ரசிகர்கள் இடையே இன்ப அதிர்சியை கொடுத்து உள்ளது. இந்த படத்தை இயக்கப்போவதும் கவுதம் தின்னானுரி தான். இது சாகித் கபூர் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோசத்தை கொடுத்துள்ளது.

Read more about: shahid kapoor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X