மிரட்டும் கொரோனா.. பங்களாவையே பாலித்தீன் கவர் போட்டு மூடிய பிரபல நடிகர்.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரபல நடிகர் தனது பங்களாவையே பாலித்தீன் கவர் போட்டு மூடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் மகாராஷ்டிரா மாநிலம் தான் ஆரம்பம் முதலே பாதிப்பு பட்டியலில் முதலிடம் பிடித்து வருகிறது.

அமிதாப் குடும்பம்
சாமானிய மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், காவலர்கள் என யாரும் கொரோனாவுக்கு தப்பவில்லை. எல்லோரையும் பதம் பார்த்து வருகிறது கொரோனா. பாலிவுட்டின் முக்கிய நட்சத்திர குடும்பமான அமிதாப் பச்சனின் குடும்பமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் கவனம்
அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மத்தியில் எச்சரிக்கை அலாரத்தை அடித்துள்ளது. இதனால் பிரபல நடிகர்கள் பலரும் கூடுதல் கவனத்தோடு செயல்பட தொடங்கியுள்ளனர்.

பிளாஸ்டிக் கவரால் மூடல்
இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் தனது குடும்பத்துடன் வசிக்கும் பிரமாண்ட பங்களா பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாடி அலுவலகம்
மேலும் ஷாருக் கான் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இருப்பதால் இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஷாருக் கான் ஏற்கனவே தனது 5 அடுக்கு மாடி அலுவலகத்தை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











