Ajithkumar: வாழ்வு தொடங்கும் இடம் நீதானே! மகனோடு செம க்யூட்டான செல்ஃபி.. ஷாலினி அஜித்குமார் போஸ்ட்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் குடும்பம் தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ள அவரது ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகமாகத்தான் இருந்துள்ளது. மற்ற பிரபலங்கள் தங்களின் குழந்தைகளின் புகைப்படங்களைப் பதிவிடும்போது குழந்தைகளின் முகத்தை மறைத்தபடி இணையத்தில் பகிர்வார்கள். ஆனால் அஜித் குடும்பத்தினர் அவ்வாறு எதுவுமே செய்யவில்லை. குழந்தையோடு வெளியே செல்லும்போது பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தால் கூட அதற்கு மறுப்போ, அல்லது அதனைத் தவிர்ப்பதோ இல்லை. இப்படியான நிலையில் அஜித்குமாரின் மனைவி ஷாலினி தனது மகனுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை ஷாலினி, அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதுவரை மிகவும் ஹேப்பியாகவும், ஜாலியாகவும் வாழ்ந்துவரும் காதல் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். இவர்களின் திருமணத்திற்குப் பின்னர் இவர்களின் திருமண வாழ்க்கை குறித்து ஒரு சர்ச்சைகூட வெளிவந்ததில்லை. திருமணத்திற்குப் பின்னர் ஷாலினி நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

அஜித்குமார் - ஷாலினி தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகளுக்கு அனோஷ்கா என்றும் மகனுக்கு ஆத்விக் என்றும் பெயரிட்டுள்ளனர். ஷாலினிக்கு மகன் ஆத்விக் என்றால் கொள்ளைப் பிரியம். அதேபோல் ஆத்விக்கிற்கும் ஷாலினி என்றால் அவ்வளவு பிரியம். மகன் கால்பந்து போட்டி பார்க்க ஆசைப்பட்டார் என ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றவர் ஷாலினி.
ஆத்விக்: இவர் தனது மகளுடன் அதிகம் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டதைவிடவும், மகனுடன் அதிகம் இருக்கும் புகைப்படத்தைத்தான் தனது இன்ஸ்டாவில் அதிகம் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஷாலினி அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது, தனது மகன் தனக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது.

ஷாலினி: தற்போது தனது மகன் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார் ஷாலினி. மேலும் அவர் அந்தப் புகைப்படத்திற்கு, "My SONshine ☀️☀️☀️♥️♥️♥️" என கேப்ஷனும் இட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். இதில் வரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸ்ஸில் கலந்து கொள்ள அஜித்குமார் தனி அணியை உருவாக்கி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

கடிதம்: சில தினங்களுக்கு முன்னர் அஜித், தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில், " சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க.... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

கோரிக்கை: எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது.



Click it and Unblock the Notifications











