Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இங்க பேச்சுவார்த்தை நடக்கும்போது அமைச்சரை எப்படி பார்க்கலாம்? ஹீரோவுக்கு எதிராக மீண்டும் சர்ச்சை!
திருவனந்தபுரம்: ஹேர் ஸ்டைல் பஞ்சாயத்து விவகாரத்தில் மலையாள இளம் ஹீரோ ஷேன் நிகம், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போது, அமைச்சரை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது'
வெயில்
மலையாள சினிமாவின் இளம் ஹீரோ ஷேன் நிகம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
தலைமுடி
படப்பிடிப்பு முடியும் வரை ஹேர்ஸ்டைலை மாற்றக் கூடாது. ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென்று தனது ஹேர்ஸ்டைலை வெட்டி, அந்தப்
புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் நிகம்.
அதிர்ச்சி
இதனால் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி
தீர்க்கப்பட்டது. இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார் நிகம்.
மாற்றினார்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்த உறுதியை மீறி, புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம். அதில், தலைமுடியை,
மண்டையின் இரண்டு பக்கமும் நன்றாக ஷேவ் செய்திருந்தார்.
தடை
இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் புகார் செய்தார். விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடைவிதித்தனர். அவர் நடித்த வெயில்,
குர்பானி படங்கள் கைவிடப்படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் திருப்தித் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
பேச்சுவார்த்தை
இந்நிலையில், இந்தப் பிரச்னையை பேசித் திர்க்க, மலையாள நடிகர்கள் சங்கமான, அம்மாவும் கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் முடிவு செய்தது.
அதன்படி இந்த பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இங்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, கேரள கலாசாரத்துறை அமைச்சர் ஏ.கே.பாலனை சந்தித்துப் பேசினார் ஷேன் நிகம். சந்திப்புக்குப் பின் பேசிய ஷேன் நிகம், தயாரிப்பாளர்களைத் திட்டி பேட்டியளித்தார்.
வெறுப்பு
இதனால் கடுப்பான கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் அவர் மீது வெறுப்படைந்தனர். நிர்வாகிகள், இங்கு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போது, எப்படி அமைச்சரை சந்திக்கலாம் என்றும், இந்தச் சந்திப்பு, பேச்சுவார்த்தையை திசைத்திருப்பும் முயற்சி என்றும் இதனால், இனி பேச்சுவார்த்தையை தொடரப்போவதில்லை என்றும் தெரிவித்தனர். இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்கம், அவருக்கானத் தடை தொடரும் என்று அறிவித்துள்ளது.
நடவடிக்கை
இன்னும் 10 நாட்களுக்குள் அவர் டப்பிங்கை பேசி முடிக்கவேண்டும். இல்லை என்றால், வேறு ஒருவர் டப்பிங் பேசுவார். அவரிடம் ரூ.7 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
ஷேன் நிகம், தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!