தம்பி சண்முக பாண்டியனுக்கு பிறந்தநாள் பரிசு.. அண்ணன் விஜய பிரபாகரன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்!
சென்னை: நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமான சூழலில் அவரது சமாதிக்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்தவண்ணம் உள்ளனர். சமீபத்தில் திருமணம் முடித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மற்றும் கார்த்திக் குடும்பத்தினருடன் சமாதியில் சென்று ஆசி பெற்றனர். இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தன்னுடைய 31வது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசர் இன்றைய தினம் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது.
கடந்த ஆண்டு வரை தன்னுடைய அப்பாவின் ஆசியுடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வந்த சண்முக பாண்டியன் இந்த ஆண்டில் தன்னுடைய அப்பாவை இழந்து முதல் முறையாக அவர் இல்லாமல் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாள் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்ட நிலையில் அவரது அண்ணன் விஜய பிரபாகரன் தன்னுடைய தம்பிக்கு காஸ்ட்லி கிப்ட் ஒன்றை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்களை மட்டுமில்லாமல் தேமுதிக தொண்டர்களையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நடிகர் விஜயகாந்த்: சென்னை நடிகர் விஜயகாந்த் தூரத்து இடி முழக்கம் படம் மூலம் தமிழில் நடிகராக என்ட்ரி கொடுத்து தொடர்ந்து பல அதிரடி ஆக்சன் டங்களில் நடித்துள்ளவர். ஒரு கட்டத்தில் ரமணா உள்ளிட்ட படங்களில் தன்னுடைய பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பொது வாழ்க்கையில் இருந்தும் சினிமாவில் இருந்தும் விலகி இருந்த நடிகர் விஜயகாந்த், கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு காலமானார். தன்னுடைய மகன்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த்.
சண்முக பாண்டியன் பிறந்தநாள்: இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை தன்னுடைய அப்பாவுடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடி வந்த சண்முக பாண்டியன், இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை அப்பா இல்லாமல் கொண்டாடி வருகிறார். விஜயகாந்த் மறைவையொட்டி சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் இருவரும் தொடர்ந்து உடைந்து அழுததை பார்க்க முடிந்தது. அவர்களை தேற்ற வார்த்தைகள் இன்றி ரசிகர்கள் மட்டுமில்லாமல் தொண்டர்களும் தவித்தனர்.
தம்பிக்கு அண்ணன் வழங்கிய காஸ்ட்லி கிஃப்ட்: இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் சண்முக பாண்டியனின் பிறந்தநாள் கிப்ஃடாக அவர் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் அவர் யானைகளுடன் காணப்படுகிறார். அவர் அதிரடியாக சண்டை போட்டதையும் இந்த டீசரில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் சண்முக பாண்டியன் பிறந்தநாளை சிறப்பாக்கும் வகையில் அவரது அண்ணன் விஜய பிரபாகரன் தம்பிக்கு காஸ்ட்லியான Porsche கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படை தலைவன் படம்: சண்முக பாண்டியனின் படை தலைவன் படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கிராமத்து கதைக்களத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார். தன்னுடைய அப்பாவை போலவே ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார். படத்தில் அவர் யானைப்பாகனாவே நடித்துள்ளதாக தெரிகிறது. படத்தில் டரவுசருடன் அவர் அதிரடி சண்டைகளை போடுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் சண்முக பாண்டியனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











