விஜயகாந்த் மகனா இது..அட்டகாசமா இருக்காரே..அவரே வெளியிட்ட பதிவு!
சென்னை: விஜயகாந்தின் இளைய மகனான நடிகர் சண்முகபாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்து, தனக்கென சினிமா, அரசியல் இரண்டிலும் தீவிர ரசிகர்களையும், தொண்டர்களையும் வைத்திருப்பவர் விஜயகாந்த்.
யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து, பல கேரக்டர் ரோல்களில் நடித்து, பிறகு ஹீரோ ஆன விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்த்
மதுரையிலிருந்து சினிமா ஆசையில் சென்னை வந்த விஜயகாந்த், திரையுலகைச் சேர்ந்த சிலரால் கடுமையாக பரிகசிக்கப்பட்டது. ஆனால் அந்த நிறமே தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய நெருக்கத்தை ஏற்படுத்தியது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது உழைப்பை மூலதனமாக செலுத்தி எந்த வாய்ப்புகளையும் தவறவிடாமல் நடித்து குவித்தார் விஜயகாந்த்.

சண்முக பாண்டியன்
இளைய மகன் தான் நடிகர் சண்முக பாண்டியன். கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மேலும் இப்படத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த போதிலும் ரசிகர்கள் மத்தியில் படு மோசமான விமர்சனங்களை பெற்றது.

வெப் சீரிஸில்
அதற்கடுத்து மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கவில்லை. அதனால் மொத்தமாக சினிமாவை விட்டு விலகி தனது அப்பா தலைவராக இருக்கும் தேமுதிக கட்சியில் இணைந்தார். தற்போது குற்றப்பரம்பரை எனும் நாவலை தழுவி இயக்குனர் சசிகுமார் எடுக்க இருக்கும் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது முகத்தில் தாடி வைத்து டிப்டாப்பாக கலக்கி உள்ளார் சண்முகபாண்டியன். அடுத்து தான் நடிக்க இருக்கும் படத்திற்காக இப்படி மாற்றியுள்ளாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜயகாந்த் மகனா இது, அட்டகாசமா இருக்காரே என அவர் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











