»   »  கரகாட்டக்காரன் புகழ் நடிகர் சண்முகசுந்தரம் மரணம்!

கரகாட்டக்காரன் புகழ் நடிகர் சண்முகசுந்தரம் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

அறுபதுகளி்லேயே நடிப்பைத் தொடங்கிய சண்முகசுந்தரம், சிவாஜி கணேசன் நடித்த ரத்தத் திலகம் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு நத்தையில் முத்து, இதயக்கனி, ஆதித்யன், குறத்தி மகன், மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, லட்சுமி கல்யாணம், வாழையடி வாழை, அவளுக்கு நிகர் அவளே, கரகாட்டக்காரன், சென்னை 60028, தமிழ் படம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actor Shanmugasundaram passes away

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பெரும்பாலான படங்களில் சண்முகசுந்தரம் முக்கிய வேடத்தில் தோன்றுவார். இவரது தங்கை தான் பழம்பெரும் நடிகை சந்திரகாந்தா.

எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், கரகாட்டக்காரன் படம்தான் சண்முகசுந்தரத்தை மிகப் பிரபலமாக்கியது.

அவர் நடித்த கடைசி படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்.

அண்ணாமலை, செல்வி, அரசி, வம்சம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் சண்முகசுந்தரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கபட்டுள்ளது. முகவரி: எண்:13, டாக்டர் ரங்கா சாலை, மயிலாப்பூர் (பாபா கோயில் அருகே).

Read more about: tamil cinema, death, மரணம்
English summary
Karakattakaaran fame actor Shanmugasundaram was passed away today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil