twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க..நடிகர் சங்கத்தை மறைமுகமாக திட்டிய ஷாந்தனு!

    |

    சென்னை : பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு அவரது மகன் ஷாந்தனு பாக்யராஜ் ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன.

    தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    கங்கை அமரன் நடிக்க வேண்டிய படத்தில் பாக்யராஜ் நடித்தார்... வருத்தத்தில் இருந்தவருக்கு இன்ப அதிர்ச்சிகங்கை அமரன் நடிக்க வேண்டிய படத்தில் பாக்யராஜ் நடித்தார்... வருத்தத்தில் இருந்தவருக்கு இன்ப அதிர்ச்சி

    தேர்தல் செல்லாது

    தேர்தல் செல்லாது

    அப்போது தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தனி நீதிபதிகள் கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்த நிலையில், பதவிகாலம் முடிந்த பிறகும் தேர்தலை அதிகாரி நடத்தப்பட்டதால் தேர்தல் செல்லாது என உத்தரவிட்டது.

    பாண்டவர் அணி வெற்றி

    பாண்டவர் அணி வெற்றி

    இந்த வழக்கை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு புஷ்பா, சத்தியநாராயணா, முகமது ஷபீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர்.

    அதிரடி நீக்கம்

    அதிரடி நீக்கம்

    இதையடுத்து, நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக பாக்யராஜ் மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து செயற்குழு முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் கே.பாக்யராஜ்,ஏ.எல்.உதயா இருவரையும் 6 மாதம் நீக்க உள்ளது.

    திருத்த முடியாது

    திருத்த முடியாது

    இந்நிலையில்,இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எவ்வளவு கீழ இறங்க முடியுமோ, அவ்வளவு இறங்கிப் பாக்குறீங்க...திருத்த முடியாது என்றும், இந்த பதிவு எந்த படத்திற்கும், ரசிகருக்கும் சம்பந்தமில்லை என்றும் ரீவிட் செய்துள்ளார். இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Director Bhagyaraj's son shanthanu Bhagyaraj tweet against Nadigar sangam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X