சாந்தனுக்கு இன்று பிறந்தநாள்.. காமன் டிபியை வெளியிட்டு ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை : மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் உடன் முதன்முறையாக இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் சாந்தனு பாக்யராஜ் நடித்துக்கொண்டு வருகிறார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் வேட்டிய மடிச்சு கட்டு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாந்தனு இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வெற்றி வலம் வருகிறார்.
நடிப்பு, நடனம் என அனைத்திலும் தூள் கிளப்பும் சாந்தனு ஆகஸ்ட் 24 ஆம் தேதியான இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறியதோடு காமன் டிபியை வெளியிட்டு இணையதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக
மிகப் பிரபலமான திரை குடும்பத்தில் இருந்து வந்த நடிகர் சாந்தனு இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப்படும் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். 1998 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வேட்டிய மடிச்சு கட்டு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட சாந்தனு பின் சக்கரகட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

சூப்பர் ஹிட்டாகின
சக்கரகட்டி திரைப்படம் ரசிகர்களை அந்த அளவு திருப்திபடுத்தவில்லை என்றாலும் இந்த படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக டாக்ஸி டாக்ஸி பாடல் நட்பின் பெருமையை பிரதிபலிக்கும் பாடலாக இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மாஸ்டர் திரைப்படத்தில்
இவ்வாறு புகழ்பெற்ற இயக்குனர் பாக்யராஜின் மகனாகவும் பிரபலமான நடிகராகவும் இருந்துவரும் சாந்தனு சக்கரகட்டி திரைப்படத்திற்குப் பின் சித்து பிளஸ் 2, கண்டேன், முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக ரசிகர்கள் மத்தியில் நிரூபித்து வந்த இவர் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இணைந்து நடனமாடி
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு, இப்பொழுது முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடிப்பதை பற்றி பல்வேறு இடங்களில் பூரித்து கூறியதுடன் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் இணைந்து நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.

ராவண கூட்டம்
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வரும் சாந்தனு அதைத்தொடர்ந்து கசடதபற, ராவண கூட்டம் மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

34வது பிறந்தநாள்
இவ்வாறு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் சாந்தனு ஆகஸ்ட் 24 ஆம் தேதியான இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை ஒட்டி பல்வேறு திரை பிரபலங்களும் இவரது பிறந்த நாள் காமன் டிபியை வெளியிட்டு கொண்டாடி வருவதோடு இவரது ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து தெறிக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











