இரண்டு பேரும் பயங்கரமா சண்டை போடுவோம்.. மாமியாரே பயந்துடுவாங்க..சாந்தனு கீகி பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் முதல் படத்திலே கவனம் பெற்று தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராய் இருக்கிறார் நடிகர் சாந்தனு பாக்யராஜ். தன்னுடைய விடாமுயற்சியால் திரைத்துறையில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாந்தனு நடிப்பில் வெளியான ப்ளு ஸ்டார் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனைவியுடன் சேர்ந்து பேட்டி அளித்துள்ளார்.

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகனான சாந்தனு 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த வேட்டிய மடிச்சு கட்டு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். பின் சில ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

Actor shanthanu Bhakyaraj and kiki jolly interview

இதைத் தொடர்ந்து, ஆயிரம்விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும், ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தை ப்ளு ஸ்டார் திரைப்படம் போக்கி உள்ளது.

சாந்தனு பாக்யராஜ்: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் தியேட்டரில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த படத்திள்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, படத்தின் வெற்றி விழாவில் பேசிய சாந்தனு, 15 வருடங்கள், 5,600 நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. எல்லாவற்றையும் தாண்டி என்னுடைய பெற்றோருக்கு இந்த வெற்றி பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்றார்.

பயங்கரமா சண்டை போடுவோம்: இந்த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் சாந்தனு தனது காதல் மனைவி கீகியுடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கீகியும் நானும் பயங்கரமா சண்டை போட்டுக்கொண்டே இருப்போம், ஆனால் அந்த சண்டை கொஞ்சம் நேரம் தான் நீடிக்கும். அந்த நேரத்தில் எங்க ரெண்டு பேருக்குள்ள யாராவது வந்தா காலி. உண்மையில் நாங்க சண்டை போட்டுக்க மாட்டோம். ஆனால், நாங்கள் பேசுவது சண்டை போடுற மாதிரி இருக்கும்.

என் குடும்பமே டான்ஸ் மாஸ்டர் என்பதால் நான் எப்போதும் சத்தமாத்தான் பேசுவேன். ஆனால், நாங்க இரண்டு பேரும் சும்மா பேசிக்கிட்டு இருந்தாக்கூட, ஏதோ சண்டை போடுகிறோம் என்று நினைத்துக்கொண்டு என் மாமியார் என்னமா என்று கேட்பாங்க என்று இருவரும் ஜாலியாக அந்த பேட்டியில் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X