என்ன சாந்தனு.. இப்படி கோட்ட விட்டுடீங்களே.. வருத்தத்தில் ரசிகர்கள் !
சென்னை : பிரபலமான திரை குடும்ப பின்னணி, அற்புதமான நடிப்பு திறமை, அசாத்தியமான நடன திறமை என அனைத்தும் கொண்டுள்ளவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.
பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானதை தொடர்ந்து இப்பொழுது சக்சஸ்ஃபுல் ஹீரோவாக வலம்வர கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இப்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் இவர் நடிக்க இருந்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகி வெற்றி பெற்றுள்ளது.

அனைத்து தகுதிகள் இருந்தும்
எதார்த்தமான நடிப்பு, அசாத்தியமான நடனத் திறமை, ஹீரோவுக்கு உரித்தான லுக் என வெற்றி நாயகனாக வலம் வர அனைத்து தகுதிகள் இருந்தும் இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க சாந்தனு போராடிக் கொண்டிருக்கிறார்.

உச்சத்தைத் தொட்டுள்ளனர்
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தொடர் தோல்வியையும் சுமாரான வெற்றியையும் பெற்று வந்த நிலையில் முதலில் இவர் நடிக்க இருந்த திரைப்படங்கள் பின் வேறொரு நடிகரின் நடிப்பில் உருவாகி அந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றதோடு அதில் நடித்த ஹீரோக்கள் இப்போது உச்சத்தைத் தொட்டுள்ளனர். அவ்வாறு சாந்தனு தவறவிட்ட திரைப்படங்களை இங்கு நாம் காண்போம்.

வாய்ப்பை தவறவிட்டார்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இளமைத் துள்ளலுடன் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான " பாய்ஸ்" திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியாகி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, சிங்களா உள்ளிட்ட பல மொழிகளில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது. சித்தார்த், நகுல், தமன், மணிகண்டன், பரத் என இப்போது பிரபலமாக உள்ள நடிகர்கள் பலரும் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் ஐந்து பேரில் ஒருவராக முதலில் நடிக்க இருந்தவர் சாந்தனு தான் எதிர்பாராத விதமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக மிகப்பெரிய வாய்ப்பை தவற விட்டுள்ளார் சாந்தனு.

இவரோட ரேஞ்சே வேற
நடிகை சந்தியா முதல் முறையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படமான "காதல் " திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கிய இருந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பரத் நடித்து அசத்தியிருப்பார். எதார்த்தமான காதல் கதை சிறந்த பாடல்கள் மனதைப் பிழியும் கிளைமாக்ஸ் காட்சி என தமிழ் சினிமாவையே உலுக்கிய இந்தத் திரைப்படத்தில் முதன் முதலில் பரத் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டது சாந்தனுவைதானாம். ஒருவேளை சாந்தனு இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் இன்று தமிழ் சினிமாவில் இவரோட ரேஞ்சே வேற.'

ஒப்பந்தமானார்
இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சசிகுமார், இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படமான "சுப்ரமணியபுரம்" தமிழ் சினிமாவில் வெளியான ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மண் வாசனையுடன் காதல், நட்பு, துரோகம் என மூன்றையும் தத்ரூபமாக காட்டி இருந்த இந்த திரைப்படம் 80களில் நடப்பதைப் போல கதைக்களம் அமைந்திருக்க இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இந்திய அளவில் பல்வேறு அங்கீகாரங்களையும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றதோடு பின் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதில் அழகர் என்ற கதாபாத்திரத்தில் ஜெய் நடித்திருந்த வேடத்தில் முதலில் ஒப்பந்தமானது நடிகர் சாந்தனு தான், எதிர்பாராத சில காரணங்களுக்காக இவர் விலக பின் ஜெய் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வெற்றிக்கொடி நாட்டுவார்
பாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம் என தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட வெற்றித் திரைப்படங்களில் ஒருவேளை சாந்தனு நடித்திருந்தால் இன்று கோலிவுட்டில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பார். இந்த விஷயம் அறிந்த இவரது ரசிகர்கள் ச்ச்ச சாந்தனு இப்பிடி கோட்ட விட்டுட்டாரே என்ன வருத்தப்பட்டு வரும் நிலையில் மாஸ்டர், முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் ஒருசில வெப்சீரிஸ் உள்ளிட்டவைகளில் சாந்தனு நடித்து வர இவர் விரைவில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வெற்றிக்கொடி நாட்டுவார் என கோலிவுட்டே நம்பிக்கையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











