twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பாகிட்ட ..அந்த சமாச்சாரம் பத்தி கேட்காதீங்க.. சாந்தனு பாக்யராஜ் ட்வீட் !

    |

    சென்னை : திரைக்கதை வல்லவர் இயக்குனர் கே. பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு பாக்யராஜ். இவர் வளர்ந்து வரும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

    இவர் தற்போது தனது அப்பாவை பற்றிய தந்தையர் தினத்திற்காக ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
    அதில், நீங்கள் அப்பாவிடம் கேட்க நினைத்த கேள்விகளை கேட்கலாம், ஆனால் அந்த சமாச்சாரத்தை பற்றி எதுவும் கேட்காதீர்கள் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நான் சீனாவின் திரைப்படங்களைக் கூட பார்ப்பதில்லை சார்.. நடிகர் பார்த்திபனுக்கு இயக்குநர் சேரன் பதில்!நான் சீனாவின் திரைப்படங்களைக் கூட பார்ப்பதில்லை சார்.. நடிகர் பார்த்திபனுக்கு இயக்குநர் சேரன் பதில்!

    தந்தையாக ரசிக்க

    தந்தையாக ரசிக்க

    முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு போன்ற பல வெற்றிப் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்த கே பாக்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த இயக்குனராகவும் முக்கியமாக திரைக்கதையில் வல்லவராகவும் இன்றும் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஹிந்தியில் மூத்த நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சனை வைத்தும் சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது படங்கள் இயக்குவதை தவிர்த்து விட்டு, பல படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியான பொன்மகள் வந்தாள் படத்தில் ஜோதிகாவின் தந்தையாக வந்து அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார்.

    பரிசாக அளிக்க

    பரிசாக அளிக்க

    இந்நிலையில் வரும் 21ஆம் தேதி தந்தையர் தினம் வருவதையொட்டி சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையர் தினத்தை பற்றி பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் இந்த தந்தையர் தினத்திற்கு நான் ஒரு ஸ்பெஷல் வீடியோவை உருவாக்கி தனது தந்தை கே. பாக்யராஜ் அவர்களுக்கு தந்தையர் தினத்திற்காக பரிசாக அளிக்க உள்ளேன் எனவே அவரின் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் நீங்கள் அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகள் ஏதேனும் இருந்தால் அதை இங்கு ஹேஸ்டைக் கேபாக்யராஜ் என்ற குறியீட்டுடன் இதை பதிவிடுங்கள் என ஆசையுடன் தன்னைப் பின் தொடர்பவர்களிடம் கேட்டிருந்தார்.

    சமாச்சாரம் பத்தி கேட்காதீங்க

    சமாச்சாரம் பத்தி கேட்காதீங்க

    அப்படி கேட்கப்படும் கேள்விகளில் சிறந்த கேள்விகளை எடுத்து அதற்கு தன் தந்தையிடம் பதிலைக் கேட்டு அதனை ஒரு வீடியோ பதிவில் இணைக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பலருக்கும் பாக்யராஜ் என்றவுடன் அவரது படங்கள் ஒருபக்கம் ஞாபகத்திற்கு வந்தாலும், அவருடைய சமாச்சாரம், முருங்கைக்காய் என்ற விஷயம் மற்றொரு பக்கம் கண்டிப்பாக வரும் இதை நன்கு அறிந்த சாந்தனு சூசகமாக முன்கூட்டியே மகன் என்ற முறையில் சமாச்சாரம் போன்ற கேள்விகளை கேட்டு விடாதீர்கள் என சிரித்தபடி பதிவிட்டிருந்தார்.

    நீங்க இன்ஸ்பிரேஷன்

    நீங்க இன்ஸ்பிரேஷன்

    இதற்கு பாக்யராஜின் ரசிகர்களும், சாந்தனு ரசிகர்களும் ஆர்வமாக தாங்கள் நெடுநாட்களாக கேட்க இருந்த கேள்விகளை பலரும் சுவாரசியமாக கேட்டு வருகின்றனர். அதில் ஒருவர் "சார் நீங்க ஒன் ஆப் தே பெஸ்ட் டைரக்டர், உங்க ஸ்கிரீன்பிளே இப்பவும் பார்க்க பிரஷ்ஷாக இருக்கும். ஏன் இப்போ மூவிஸ் பண்றது இல்ல ப்ளீஸ் பண்ணுங்க சார், நாங்க வெய்டிங், உங்க முந்தானை முடிச்சு மூவி இப்ப கூட பிரஷ்ஷாக இருக்கு, யூ ஆர் லெஜெண்ட் சார், எங்களை போல வரும் பிலிம் மேர்ஸ்க்கு நீங்க இன்ஸ்பிரேஷன்" என கூறி தற்போது நடிகராக வலம் வரும் பாக்யராஜை மீண்டும் இயக்குனராக பார்க்க ஆசைப்படுறார் அந்த தீவிர ரசிகர்.

    பாக்யராஜ் அப்பாவாகவும்

    பாக்யராஜ் அப்பாவாகவும்

    மற்றொருவர் இவரிடம், 1991இல் வெளிவந்த ருத்ரா படத்தின் திரைக்கதை எழுதிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். மேலும் இன்னும் சிலர் நீங்கள் எப்படி வீட்டில் இருக்கிறீர்களோ அதே போன்று படத்திலும் பாக்யராஜ் அப்பாவாகவும், சாந்தனு ஹீரோவாகவும், கீக்கீ ஹீரோயினாகவும். உங்கள் ரியல் காம்போவை ரீல் காம்போவாக பார்க்க ஆசைப்படுவதாகவும் மேலும் இது நடந்தால் கோலிவுட் திரையுலகத்திற்கு மிகப்பெரிய கலை விருந்தாக இருக்கும் எனவும் பூரிப்புடன் கேட்டிருந்தார் அந்த ரசிகர், இதைப் பார்த்த கீக்கீ வெட்கப்படுவது போன்று ஸ்மைலியை அதற்கு பதிலாக போட்டிருந்தார்.

    English summary
    Actor Shanthanu plan a special father's day video with her father Bhagyaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X