சூப்பர்ஹிட் பீர்பால் படத்தின் ரீமேக்... நடிக்கவிருக்கும் மாஸ்டர் பட நடிகர்
சென்னை : கன்னட திரையுலகில் சூப்பர்ஹிட்டான திரைப்படம் பீர்பால்.
இந்த படத்தின் ரீமேக் தெலுங்கில் திம்மரசு என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

தெலுங்கில் ரீமேக்
கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான திரைப்படம் பீர்பால். ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கடந்த 2019ல் வெளியான இந்த படம் தெலுங்கிலும் திம்மரசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த ஜனவரியில் ரிலீசாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சாந்தனு நாயகன்
இந்நிலையில் இந்த படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் நடிகர் சாந்தனு லீட் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த்ரில் படமான இந்த படம் தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களுடன் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல பெயர்
நடிகர் சாந்தனு தேர்ந்தெடுத்த படங்களில் நடித்துவரும் நிலையில் இந்த படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தது.

ரிலீசுக்காக காத்திருப்பு
இந்நிலையில் தற்போது அவர் முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் ராவணக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் பாடல் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. இந்த இரு படங்களும் ரிலீசுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











