அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.. தமிழ் சினிமாவிலும் நெபோடிசம் இருக்கிறது.. பிரபல நடிகர் பகீர்!

By

சென்னை: தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியிலும் நெபோடிசம் இருக்கிறது என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTOR NATTY NATARAJ CHAT | BOLLYWOOD இல் திறமையைத்தான் பாக்குறாங்க | FILMIBEAT TAMIL

நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு நெபோடிசம் பற்றிய பேச்சு பாலிவுட்டில் தலைதூக்கி இருக்கிறது.

அதாவது வாரிசு நடிகர்கள், வாரிசு நடிகர், நடிகைகள் இல்லாத அவுட்சைடர்கள் பற்றி காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

வாரிசு நடிகர், நடிகைகள்

வாரிசு நடிகர், நடிகைகள்

திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கத் தெரிவித்து வருகின்றனர். வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைதளங்களுக்கே சென்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து, அவர்களை கடுமையாக விளாசினர். இதனால் சோனாக்‌ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர்.

எஃகு நரம்புகள்

எஃகு நரம்புகள்

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர், நடிகைகள் நெபோடிசத்தால் பல வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறி வருகின்றனர். இது காலங்காலமாக சினிமாவில் நடந்து வருவதுதான் என்றும் இதுபற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றது என்றும் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், உங்கள் நரம்புகள் எஃகில் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பாலிவுட்டுக்கு வாருங்கள் என்று 'அவுட்சைடர்'களுக்கு பிரபல நடிகர் சோனு சூட் அட்வைஸ் செய்திருந்தார்.

நட்டி என்கிற நட்ராஜ்

நட்டி என்கிற நட்ராஜ்

இந்நிலையில் தமிழ் நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியம், 'தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல. ஆனா குரூபிசம் இருக்கு..யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறதை யாரோ நிர்ணயிக்கறாங்க..யாருங்க நீங்க? என்று கேட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சாந்தனு பாக்யராஜ்

சாந்தனு பாக்யராஜ்

இந்நிலையில் இதை டேக் செய்துள்ள கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் சாந்தனு, '#Nepotism இங்கேயும் உள்ளது. அதே குரூபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதுவும் ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X