கவிதையில் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சாந்தனு ..பூர்ணிமாவை வாழ்த்திய பிரபலங்கள் !
சென்னை : நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது அம்மா பூர்ணிமா பாக்யராஜின் பிறந்த நாளுக்கு கவிதைச் சொற்களால் ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
"கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியும் என்றால், அது ஒரு தாயின் வடிவத்தில் மட்டுமே" என தன்னுடைய அம்மாவிற்கு கவித்துவமாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி அசத்தியிருக்கிறார் சாந்தனு.
ஜூலை 27 ஆம் தேதியான இன்று நடிகையும் இயக்குனர் பாக்யராஜின் மனைவியுமான பூர்ணிமா பாக்யராஜ் இன்று தனது 60வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் சாந்தனு பாக்யராஜ் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு கவிதை வடிவில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

வெற்றி நாயகியாக
90 மற்றும் 80களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூர்ணிமா. நெஞ்சில் ஒரு முள், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட படங்களில் மூலம் தமிழில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய பூர்ணிமா பயணங்கள் முடிவதில்லை, டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் வெற்றி நாயகியாக வலம் வர தொடங்கினார்.

500 நாட்களை கடந்து
தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த பூர்ணிமா பாக்யராஜ் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் மோகனுடன் இணைந்து இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் விதி திரைப்படம் கிட்டத்தட்ட 500 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய சாதனையை செய்து பின் பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

பாக்யராஜை காதலித்து
பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பூர்ணிமா 1984 ஆம் ஆண்டு நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டு இன்றுவரை வெற்றி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ரசிக்க வைத்து
திருமணத்திற்குப் பின் நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்த பூர்ணிமா பாக்யராஜ் தமிழில் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி ஜில்லா, முப்பரிமாணம், ராட்சசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அனைவரையும் மீண்டும் ரசிக்க வைத்து வருகிறார்.

60வது பிறந்தநாள்
ஒரு சிறந்த நடிகையாக இன்றும் திரைப்படத்துறையில் தனது நடிப்பை கொடுத்து வரும் பூர்ணிமா பாக்யராஜ் ஜூலை 27 ஆம் தேதியான இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவரின் மகனும் நடிகருமான சாந்தனு கவிதையால் தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

சாந்தனு அம்மாவிற்கு அன்பு வாழ்த்து
அந்த பதிவில் பூர்ணிமா பாக்யராஜின் இளம் வயது புகைப்படம் ஒன்றையும், சாந்தனுவுடன் நடனமாடும் புகைப்படம் ஒன்றையும் சேர்த்து "கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியும் என்றால், அது ஒரு தாயின் வடிவத்தில் மட்டுமே" என தாய்மையைப் போற்றி பின் உண்மையான வடிவம் அம்மா, இவ்வாறு சமூக வலைத்தளத்தின் மூலமாக வாழ்த்துக்கள் சொன்ன சந்தனுவை பாராட்டியும் பூர்ணிமா பாக்யராஜ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











