முருங்கைக்காய் விலை உயர்வுக்கு நாங்கள் காரணம் இல்லைங்கோ... அலறும் சாந்தனு

சென்னை : நடிகர் சாந்தனு, அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ளது முருங்கைக்காய் சிப்ஸ் படம்.

இந்த படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் முருங்கைக்காயின் விலை உயர்வு குறித்து சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சாந்தனு

நடிகர் சாந்தனு

நடிகர் சாந்தனு, அதுல்யா ரவி, கே பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வரும் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போனது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்களும் காத்திருந்தனர்.

வரவேற்பைப் பெற்றுள்ள பாடல்கள்

வரவேற்பைப் பெற்றுள்ள பாடல்கள்

படத்தின் பாடல்கள் வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. சாந்தனுவும் அதுல்யாவும் இணைந்து சூப்பரான குத்து பாடலையும் மெலடி பாடலையும் ரசிகர்களுக்காக கொடுத்திருந்தனர். இந்த இரண்டு பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

கலர்ஃபுல்லான பாடல்

கலர்ஃபுல்லான பாடல்

குறிப்பாக திருமணத்தை ஒட்டி நடைபெறும் பாடல் மிகவும் கலர்ஃபுல்லாக அமைந்திருந்தது. இந்தப் பாடலில் கே பாக்யராஜ் ஒரு சீனில் காணப்படுவார். அவர் படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

வித்தியாசமான தலைப்பு

வித்தியாசமான தலைப்பு

இந்த படத்தின் தலைப்பு வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது. முருங்கைக்காய் என்றாலே கே பாக்யராஜ் தான் நினைவிற்கு வருவார். இந்நிலையில் அவரது மகன் சாந்தனு மற்றும் கே பாக்யராஜ் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு முருங்கைக்காய் சிப்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முருங்கைக்காய் விலை உயர்வு

முருங்கைக்காய் விலை உயர்வு

தற்போது கோயம்பேட்டில் முருங்கைக்காயின் விலை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதையொட்டி சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கலாட்டாவாக ஒரு பதிவை செய்துள்ளார். ஜஸ்ட் ஃபார் ஃபன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முருங்கை விலை உயர்வு

முருங்கை விலை உயர்வு

தற்போது மழை உள்ளிட்ட காரணங்களால் கோயம்பேட்டில் முருங்கைக்காயின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் விலை 180 ஆக உயர்ந்துள்ளது. சில்லறையாக 200 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சாந்தனு குறும்பு பதிவு

சாந்தனு குறும்பு பதிவு

இதையடுத்து சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் இதுக்கு சத்தியமா நாங்க காரணம் இல்லைங்கோ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பதிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

மாஸ்டர் படத்தில் சிறிய கேமியோ ரோலில் நடித்திருந்தார் சாந்தனு. ஆனால் அந்த ரோல் அவருக்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று தந்துள்ளது. இதையடுத்து தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து கோலிவுட்டில் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள சாந்தனு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சிறப்பான வெற்றியை அவருக்கு பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X