Shanthnu :சாந்தனுவின் இராவண கோட்டம் ரிலீஸ்.. என்ன இந்த படங்களோட மோதுதா?
சென்னை : மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் இராவண கோட்டம்.
கிராமத்து பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் செங்குட்டுவன் என்ற கேரக்டரில் சாந்தனு நடித்துள்ளார்.
ராமநாதபுரம் பகுதி மக்களின் வாழ்வியலை தன்னுடைய நடைஉடையில் கொண்டு வந்ததற்காக மிகவும் மெனக்கெட்டதாக சாந்தனு தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சாந்தனுவின் இராவண கோட்டம் ரிலீஸ் : நடிகர் சாந்தனு தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்ற போதிலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். பெரிய நடிகரின் மகனாக இருந்த போதிலும், அனைத்து திறமைகளையும் கொண்டவராக இருந்த போதிலும் தன்னை நிரூபிக்க அவர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். அடுத்தடுத்து முருங்கைக்காய் சிப்ஸ், மாஸ்டர் போன்ற படங்கள் அவர் நடிப்பில் வெளியான போதிலும் அதிகமான கவனத்தை ரசிகர்களிடையே பெறவில்லை.
சமீபத்தில் மாஸ்டர் படத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கமிட்டானதாகவும் ஆனால் அந்த எதிர்பாப்பை அந்த கேரக்டர் தனக்கு பூர்த்தி செய்யவில்லை என்றும் சாந்தனு தெரிவித்திருந்தார். அதற்கேற்றாற்போல, அந்த கேரக்டர் படத்தில் சில நிமிடங்களே பயன்படுத்தப்பட்டிருக்கும். சாந்தனுவுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் அந்த கேரக்டர் ஏமாற்றத்தைதான் கொடுத்தது. அந்த கேரக்டர் இன்னும் மெருகேற்றப்பட்டிருக்கலாம் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது சாந்தனு நடிப்பில் இராவணக் கோட்டம் என்ற படம் உருவாகியுள்ளது. மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாந்தனுவிற்கு கயல் ஆனந்தி ஜோடியாகியுள்ளார். மேலும் பிரபு, இளவரசு, தீபா சங்கர், சஞ்சய், முருகன், பிஎல் தேனப்பன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ராமநாதபுரம் பகுதியில் கடந்த 1957ல் நடைபெற்ற தூவல் கலவரம் உள்ளிட்ட உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இநத்ப் படம் உருவாகியுள்ளது.

படத்தில் கிராமத்து இளைஞனாக செங்குட்டுவன் என்ற கேரக்டரில் சாந்தனு நடித்துள்ளார். உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட போதிலும், அதிலும் காதல், சண்டைகள் உள்ளிட்டவையும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ராமநாதபுரம் மக்களின் வாழ்வியல் தனக்கு மிகவும் புதுமையாக இருந்ததாகவும், அதை தனக்குள் கொண்டுவருவதற்காக படப்பிடிப்பு இல்லாதபோதும் லுங்கிக் கட்டிக் கொண்டு சாதாரண இளைஞனாகவே நடமாடியதாகவும் அவர் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் மே மாதம் 12ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே நாளில் வெங்கட் பிரபு -நாக சைத்தன்யா கூட்டணியில் உருவாகியுள்ள கஸ்டடி படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் டீசர் வெளியாகிவுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் பர்ஹானா படமும் மே 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இராவணக் கோட்டம் படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் அன்றய தினம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











