மீடூ விவகாரம்.. பாக்கியராஜ் வீடியோவை பகிர்ந்த சாந்தனு! எல்லாம் விதி… வேற என்ன சொல்றது?

மீடு தொடர்பாக பாக்கியராஜ் பேசும் வீடியோவை சாந்தனு பகிர்ந்துள்ளார்

சென்னை: மீடூ தொடர்பாக நடிகர் பாக்கியராஜ் பேசும் வீடியோவை சாந்தனு பகிர்ந்துள்ளார்.

பாலியல் சீண்டல்களுக்கு ஆளான பெண்கள் மீடூ ஹேஷ்டேக்கில் பாலியல் குற்றம்சாட்டி வருகின்றனர். திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலருடைய பெயரும் இதில் சிக்குவதால் மீடூ மிகபெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Actor Shanthnu shared Bhagyaraj video!

மீடூவில் புகார் கூறும் பெண்களுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சாந்தனு, அவருடைய தந்தை கே.பாக்கிரயாஜ் விதி திரைப்படத்தில் பேசிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அது மீடூ விவகாரத்திற்கு மிகப்பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

விதி திரைப்படத்தில் மோகனால் ஏமாற்றப்பட்ட பிறகு பூர்ணிமா நீதிமன்றத்திற்குப் போவார். அப்போது எதிர்தரப்பு வக்கீல், பூர்ணிமா மேல் தவறு இருப்பதாக வழக்கை திருப்ப முயற்சிப்பார். அந்த வழக்கு பற்றி ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வரும் பாக்கியராஜ் அற்புதமாக பதிலளித்திருப்பார்.

" நம்ம நாட்டுல பொம்பளைங்களுக்கு பிரச்சனை வர்றது இன்னக்கி ஒண்ணும் புதுசு கிடையாது. ராமாயணத்துல ராமரு, சீதை மேல சந்தேகப்பட்டு நெருப்புல குதிக்க சொன்னாரு. மகாபாரதத்துல புருஷன்மார்களே பொண்டாட்டிய அடமானம் வச்சு சீட்டாடிபுட்டாங்க. அந்த மாதிரி ராதாவை ஒருத்தன் ஏமாத்துனது சாதாரண விஷயம்தான். ஆனால் அதற்காக அந்தபெண் கோர்ட்டுக்கு போயிருக்குப் பாருங்க, உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம். தனக்கு நேர்ந்த இந்த விஷயம் வேறு பெண்னுக்கு நடக்கக் கூடாது என்பதற்காகவும், இதுபோல் செய்யும் ஆண்களுக்கு பயம் வர வேண்டும் என்பதற்காகவுமே ராதா கோர்ட்டுக்கு போயிருக்காள். அது பாராட்டப் பட வேண்டிய விஷயமில்லையா? எனக் கேட்பார்.

அதற்கு பிறகு, கட்டிப்பிடிக்கும் போது, ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்துதான் கட்டிப்பிக்கிறோம். ஆனால் கர்ப்பம் என்ற கட்டுப்பாடு வரும்போது ஆண் தனியே காணாமல் போய்விடுகிறான். என்னைக்கு அந்த கட்டுப்பாட்டுக்குள் ஆணும் வருகிறானோ அன்றுதான் பிரச்சனை தீரும். செக்ஸும் அழகான மேட்டர்தான் அதை நாம் இன்னும் புரிஞ்சிக்கல" என்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X