பென்டு கழண்டுருச்சு... சாந்தனு வெளியிட்ட டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரூ வீடியோ பாடல்
சென்னை : முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இரண்டாவது சிங்கிள் டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரு பாடல்.
இதன் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
தற்போது இதன் வீடியோ பாடலை படத்தின் நாயகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தரண்குமார் இசை
நடிகர் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மனோபாலா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் முதல் சிங்கிள் கடந்த மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

லிரிக் வீடியோ வெளியீடு
திருமண நிகழ்வின்போது பாடப்படுவதாக அமைந்துள்ள அந்த பாடல் விஷூவல் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. சிறப்பான மெலடி பாடலாக கேட்பதற்கு இனிமையாக இருந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தில் டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரு என்ற பாடல் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டது.
வீடியோ வெளியீடு
இந்த பாடலுக்கு முதல் பாடலைவிட அதிக வரவேற்பு காணப்பட்டது. குத்து நம்பராக வெளியிடப்பட்ட இந்த பாடலின் வீடியோ இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் நாயகன் சாந்தனு வெளியிட்டுள்ளார்.

குறும்புப் பதிவு
முதலிரவின் போது பாடப்படுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சாந்தனு, இந்த பாடல் சூட்டிங்கின்போது மிகவும் விருப்பத்துடன் நடித்ததாகவும் பென்டு கழண்டுருச்சு என்றும் குறும்புடன் பதிவிட்டுள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications