சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம்… டிசம்பர் 10ல் ரிலீஸ் என அறிவிப்பு
சென்னை : நடிகர் சாந்தனு, அதுல்யா ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ்.
இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 10ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக படத்தின் நாயகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

முருங்கைக்காய் சிப்ஸ் படம்
நடிகர் சாந்தனு, அதுல்யா ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். மாஸ்டர் படம் கொடுத்த வரவேற்பை அடுத்து சாந்தனு நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே கொடுத்துள்ளது.

ஸ்ரீஜர் இயக்கம்
ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கே பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, யோகிபாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர் படத்தை தயாரித்துள்ளார். இந்த மாதம் 19ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 10ல் ரிலீஸ்
இந்நிலையில் வரும் டிசம்பர் 10ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக படத்தின் நாயகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார். படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் குறித்த போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.

தரண்குமார் இசை
படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ள நிலையில் முன்னதாக படத்தின் பாடல்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளன. லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகள் அனைத்து சிறப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்தர்
முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், தான் நல்ல படம் எடுத்த தயாரிப்பாளர் இல்லை ஆனால் நல்ல தயாரிப்பாளர் என்று தெரிவித்திருந்தார். அவர் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

வெற்றிக்காக காத்திருப்பு
நீண்ட நாட்களாக தன்னை கோலிவுட்டில் நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவரும் சாந்தனுவிற்கு மாஸ்டர் படம் நல்ல பிரேக்கிங்கை கொடுத்துள்ளது. சிறிய வேடமாக இருந்தாலும் படத்தில் அவரது கேரக்டர் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில அவர் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











