இந்தப் பெண்தான் என் வாழ்க்கையின் எல்லாமே.. மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சாந்தனு!
சென்னை : நடிகர் சாந்தனு மற்றும் பிரபல டிவி ஆங்கர் கிகி விஜய் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்.
தொடர்ந்து தங்களது கேரியரை நோக்கிய பயணத்தில் இருவரும் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.
இருவரும் இணைந்து இசைப்பள்ளி நடத்தி வருகின்றனர். யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றனர்.

நடிகர் சாந்தனு பாக்கியராஜ்
நடிகர் சாந்தனு பாக்கியராஜ், சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். பல படங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். தொடர்ந்து கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்து நடித்துள்ளார். சிறிய ரோலாக இருந்த போதிலும் இந்த கேரக்டர் கவனத்தை பெற்றது.

ஆங்கர் கிகி விஜய்
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல சின்னத்திரை ஆங்கர் கிகி விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் கோலிவுட்டில் மனமொத்த ஸ்டார் தம்பதிகளாக வலம்வந்துக் கொண்டிருக்கின்றனர். சின்னத்திரையில் பிரபல சேனலில் ஆங்கராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கிகி விஜய்.

பிசியான கிகி விஜய்
ஆங்கராக மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களின் இசை வெளியீடுகள் உள்ளிட்டவற்றையும் தனியாக நடத்தி வருகிறார் கிகி விஜய். மேலும் சாந்தனுவுடன் இணைந்து இசைப்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இருவரும் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

நடனப்பள்ளி நடத்தும் தம்பதி
தங்களது நடனப்பள்ளியின் நிகழ்ச்சிகள், படங்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் உள்ளிட்டவற்றை தங்களது யூடியூப் பக்கத்தில் இவர்கள் பகிர்ந்து வருகின்றனர். தங்களது குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளையும் தங்களது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வருகின்றனர்.

கிகி விஜய் பிறந்தநாள்
இந்நிலையில் இன்றைய தினம் கிகி விஜய் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ள சாந்தனு, கிகிக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். தங்களது சந்திப்பு விபத்தாக நிகழ்ந்தது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கையின் எல்லாமும்
மேலும் இந்தப் பெண்தான் என்னுடைய வாழ்க்கையின் எல்லாமும் என்றும் சாந்தனு கூறியுள்ளார். ஹாப்பி பர்த்டே வைஃபே என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாந்தனு மற்றும் கிகி இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து சிறப்பான பல புகைப்படங்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











