அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா... தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சாந்தனு
சென்னை : தளபதி விஜய்யின் 47வது பிறந்தநாள் நாளைய தினம் சிறப்பான வகையில் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் வீடியோக்களையும் போஸ்டர்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சாந்தனு ஒருநாள் முன்னதாகவே தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
நடிகர் சாந்தனு தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் சாந்தனு நடித்துள்ளார். படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றார். அடுத்ததாக தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படம் அவரது நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
Recommended Video

குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் விஜய்யின் 47வது பிறந்த தினம் நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ரசிகர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களையும், வீடியோக்களையும் போஸ்டர்களையும் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

சாந்தனு அட்வான்ஸ் வாழ்த்து
தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் விஜய்யின் ரசிகர்கள் தாங்களாகவே உருவாக்கிய போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சாந்தனு விஜய்க்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என்று அவர் உரிமையுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உற்சாகத்தை அளிப்பதாக பாராட்டு
மேலும் கேரளா ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரை பார்ப்பது மிகவும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை 6 மணியளவில் சன் பிக்சர்ஸ் அவரது தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











