Shariq & Maria: எனதருகினில் நீ.. அழகு அள்ளும் ஷாரிக் & மரியா புதிய வீடியோ!
சென்னை: நடிகர் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாசின் மூத்த மகனான ஷாரிக் ஹாசன் மற்றும் மரியா ஜெனிஃபர் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் இவர்களின் திருமணம்தான் தொடர்ந்து பல வாரங்களாக ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. தன்னை விட வயதில் மூன்று வயது பெரியவரான மரியாவை திருமணம் செய்துள்ளார் ஷாரிக்.
மரியாவிற்கு இது இரண்டாவது திருமணம். அவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் இவர்களின் திருமணம் நடந்துள்ள நிலையில், இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்தை தொடர்ந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வரும் இவர்கள் தங்களது சமீபத்திய பேட்டியின் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

ஷாரிக் ஹாசன் & மரியா ஜெனிஃபர்: நடிகர் ரியாஸ்கான் -உமா ரியாஸின் மூத்த மகன் ஷாரிக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மரியா ஜெனிஃபர் என்பவரை இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். பிரம்மாண்டமாக நடந்த இவர்களின் திருமணம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தொடர்ந்து ஷாரிக் மற்றும் மரியா குறித்தும் அவர்களது குடும்ப வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஷாரிக்கிற்கு இது முதல் திருமணம் என்றவகையில் இந்த திருமணம் மிகப் பெரிய கவனத்தை பெற்றிருந்தது.
கிராண்டாக நடந்த திருமணம்: ஜிம்மில் தான் முதல்முறையாக மரியாவை தான் சந்தித்ததாகவும் பார்த்தவுடன் ஸ்பார்க் பற்றி கொண்டதாகவும் தன்னுடைய பேட்டியொன்றில் ஷாரிக் உற்சாகத்தை பதிவு செய்திருந்தார். தன்னைவிட மூன்று வயது மூத்த மரியாவை திருமணம் செய்த நிலையில், தாலி, மோதிரம் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கிவிட்டு தான் தன்னுடைய அப்பா ரியாஸ் கான் மற்றும் அம்மா உமா ரியாசுக்கு தன்னுடைய இந்த திருமணம் குறித்து தெரிவித்துள்ளார் ஷாரிக். இதனால் அதிர்ச்சி அடைந்தாலும் தன்னுடைய மகனின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் அந்த திருமணத்தை மேலும் கிராண்டாக நடத்தி முடித்துள்ளனர் ரியாஸ் மற்றும் உமா ரியாஸ்.

இந்து & கிறிஸ்தவ முறைப்படி திருமணம்: ஷாரிக் ஹாசன் மற்றும் மரியாவின் திருமணம் மிக நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ இந்து முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் அடுத்தடுத்து நடந்தது. இந்த திருமண கொண்டாட்டத்தில் ரியாஸ் கான், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். திரைத்துறையை சேர்ந்தவர்களும் சின்னத்திரை பிரபலங்களும் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தனர். இந்த திருமணத்தால் ரொம்பவே பிரபலமாகிவிட்டார் ஷாரிக். தன்னுடைய மனைவியுடன் இணைந்தும் தன்னுடைய பெற்றோருடன் இணைந்தும் அவர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

ஷாரிக் & மரியா புதிய வீடியோ: இந்த ஜோடி தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் அடுத்தடுத்த பேட்டிகளில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள இவர்களுக்கு அவ்வளவு விஷயங்கள் உள்ளன. ஒரு வருடம் மட்டுமே காதலித்த போதிலும் இவர்களின் அன்பு மற்றும் காதல் நிலைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தன்னுடைய மூன்று வயது சிறியவராக இருந்த போதிலும் தன்னுடைய மகளுக்கு பொறுப்பான தந்தையாக ஷாரிக் இருப்பதாக மரியா உற்சாகம் தெரிவித்திருந்தார். இவர்களின் இந்த அன்பு தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் தங்களது சமீபத்திய பேட்டியின் வீடியோவை இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ளனர். இவர்களின் ஜோடிப் பொருத்தம் இந்த வீடியோவில் அழகு அள்ளுகிறது.


Click it and Unblock the Notifications











