Shariq haasan: பொண்ணோட சேர்ந்து ஆட்டம் போட்ட ஷாரிக் ஹாசன்.. கண்டுக்கொள்ளாத மரியா!

சென்னை: நடிகர் ஷாரிக் ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தான் காதலித்த மரியா ஜெனிஃபரை சென்னையில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் சுற்றார் மற்றும் நட்பு சூழ விமரிசையாகவும் அதே நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்க நடந்து முடிந்துள்ளது.

மரியா ஜெனிஃபருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து 9 வயதில் மகள் உள்ள நிலையில், அவரை அந்த மகளுடன் ஏற்றுக் கொண்டார் ஷாரிக். இதையொட்டி இவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தன. இந்த திருமணத்தின் தேதியை முடிவு செய்துவிட்டே தங்களிடம் கூறியதாக ஷாரிக்கின் பெற்றோர் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ் இருவரும் குறை கொட்டிக் கொண்டனர்.

shariq haasan maria jennifer ira

ஷாரிக் ஹாசன் & மரியா திருமணம்: நடிகர் ஷாரிக் ஹாசன் தொடர்ந்து பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் ஈடுபட்ட நிலையில் அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டார். இந்நிலையில் கடந்த ஓராண்டாக தான் காதலித்த மரியா ஜெனிஃபரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். மரியாவிற்கு திருமணம் நடந்து 9 வயதில் மகள் உள்ள நிலையில் அவரை மூன்று வயது இளையவரான ஷாரிக் திருமணம் செய்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

அடுத்தடுத்த பேட்டிகள்: நட்சத்திர தம்பதியான ரியாஸ்கான் மற்றும் உமா ரியாசின் மூத்த மகனான ஷாரிக்கின் இந்த திருமணம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த நிலையில், இந்த திருமணத்திற்கு ஏராளமான திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணம் கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி நடந்தது. முன்னதாக கொடுத்த பேட்டிகளில் இவர்களின் காதல் குறித்தும் கல்யாணம் குறித்தும் இருவரும் மனம்திறந்து பேசினர். தன்னுடைய மகளை சிங்கிள் மதராக இருந்து தான் கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் ஆனால் ஷாரிக் தன்னுடைய மகளை சிறப்பாக பார்த்துக் கொண்டதாலேயே அவரது காதலை தான் ஏற்றுக் கொண்டதாகவும் மரியா குறிப்பிட்டிருந்தார்.

மகளுடன் ஷாரிக் டான்ஸ்: இதேபோல தன்னுடைய மகள் ஐராவை ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் இருவரும் தங்களது பேத்தியாகவே பார்த்ததாகவும் அவள் குறித்து அக்கறையுடன் விசாரிப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். இவர்கள் அனைவரும் குடும்பத்தினராக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்திருந்தனர். இதேபோல அடுத்தடுத்து கொண்டாட்ட வீடியோக்களையும் பகிர்ந்திருந்தனர். இவர்களின் இந்த வீடியோக்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகின. இந்நிலையில் தற்போது தன்னுடைய மகள் ஐராவுடன் ஷாரிக் ஆட்டம் போடுவதாக வீடியேவை வெளியிட்டுள்ளார்.

கண்டுக்கொள்ளாத மரியா: லிஃப்டில் ஷாரிக், ஐரா மற்றும் மரியா மூவரும் உள்ள நிலையில் ஷாரிக் ஆட்டம்போட, அதைப்பார்த்து ஐராவும் ஆட்டம் போடுவதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது. இவர்களின் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் மரியா தனியாக மொபைலை பார்த்தபடி இந்த வீடியோவில் காணப்படுகிறார். முன்னதாக ஷாரிக் தன்னிடம் ஐராவை அப்பாவாக தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதாக மரியா பகிர்ந்திருந்தார். அதைப்போலவே தற்போது ஐராவுடன் மிகவும் சிறப்பாக அவர் கொண்டாட்டத்துடன் காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X