கல்யாணத்துக்கு அப்புறம் மனைவியோட ஷாரிக் கொண்டாடிய கிறிஸ்துமஸ்.. உமா ரியாசும் கலக்கியிருக்காங்களே!
சென்னை: நடிகர் ஷாரிக் ஹாசன் சில படங்களில் நடித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் ஏராளமான ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். ஆனால் அவற்றை காட்டிலும் இவரது திருமணம் தான் அதிகமான பிரபலத்தை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. தன்னைவிட மூன்று வயது மூத்தவரான மரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷாரிக்.
மரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயது மகள் உள்ள நிலையில் அவரது குழந்தையை தன்னுடைய மகளாக ஏற்றுக் கொண்டு மரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இந்த திருமணத்திற்கு அதிகமான பாராட்டுக்களும் விமர்சனங்களும் கிடைத்த நிலையில் தொடர்ந்து இந்த ஜோடி ரசிகர்களின் கவனத்திற்குரிய ஜோடியாகவே இருந்து வருகிறது.

ஷாரிக் & மரியா திருமணம்: சின்னத்திரை பிரபலங்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் திருமணத்திற்கு நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதற்கு காரணம் தன்னைவிட மூன்று வயது மூத்த மரியாவை திருமணம் செய்து கொண்டார் ஷாரிக். இதில் ஹைலைட் என்னவென்றால் மரியா ஏற்கனவே திருமணமாகி ஒன்பது வயது மகளுடன் இருந்து வந்தார். திருமணமே வேண்டாம் என்று நினைத்திருந்த மரியாவை கன்வின்ஸ் செய்து அவரை காதலிக்க வைத்த ஷாரிக், தொடர்ந்து திருமணமும் செய்து கொண்டார்.

ஹனிமூன் கொண்டாட்டம்: இவர்கள் திருமணத்தில் பல கோடி ரூபாய் வரதட்சணையாக ஷாரிக்கிற்கு கிடைத்ததாக பல தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இருவருமே வாய் திறக்கவில்லை. இந்நிலையில் திருமணம் முடிந்த பின்பும் தொடர்ந்து இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து பேட்டிகளை இந்த ஜோடி கொடுத்து வந்த நிலையில், சில பேட்டிகளில் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் தம்பதியும் இணைந்து கொண்டது. இந்நிலையில் ஷாரிக் மற்றும் மரியா இருவரும் ஹனிமூனுக்கு வெளிநாட்டிற்கும் சென்றனர். மரியாவின் குழந்தையையும் அழைத்துச் சென்றனர்.
முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: இந்நிலையில் நேற்றைய தினம் திருமணத்திற்கு பிறகு வந்த முதல் கிறிஸ்துமஸை இந்த ஜோடி மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ இந்த கிறிஸ்துமஸ் செலிப்ரேஷனை இவர்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் ஷாரிக்கின் அம்மாவும் நடிகையுமான உமா ரியாஸ் கலந்து கொண்டார். ரியாஸ் கான் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. இதன் அடுத்தடுத்த கலர்ஃபுல் புகைப்படங்களை இந்த ஜோடி தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களின் இந்த கொண்டாட்டத்திற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











