150 கோடி சொத்து.. 25 கோடி பங்களா..ஷாரிக்கின் திருமண சீக்ரெட் இதுதான்.. இணையத்தில் பரவும் தகவல்!
சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகன் தான் ஷாரிக் ஹாசன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர், மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்காக பலகோடி சொத்துக்களை மரியாவின் அப்பா வரதட்சனையாக கொடுத்துள்ளதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.
ஷாரிக் ஹாசன், மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரின் சம்மதத்துடன் அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. மரியா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது.

ஷாரிக் ஹாசன்: திருமணத்திற்கு பிறகு ஷாரிக்கும், மரியாவும் முதன் முறையாக யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அதில் பேசிய ஷாரிக், மரியாவை முதன்முதலாக ஜிம்மில் சந்தித்ததாகவும், பார்த்தவுடன் அவர் மீது காதல் வந்துவிட்டதால், தினமும் ஜிம்முக்கு சென்று அவரின் ஆசைகளை புரிந்து கொண்டு காதலை சொல்லவைத்தேன் என்று கூறியிருந்தார். அப்போது பேசிய மரியா, நான் சிங்கிள் மதராக கஷ்டப்பட்டு என் மகளை வளர்ந்து வந்தேன், இதனால், எனக்கு என் மகள் தான் முக்கியமாக தெரிந்தது. இதனால் இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. வருபவர் என்னை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால், என் மகளை ஏற்றுக்கொள்வார்களா என்கிற பயம் இருந்தது.
நல்ல அப்பா: ஆனால், என் மகளை ஷாரிக் ரொம்ப நன்றாக பார்த்துக்கொண்டார். அதைப்பார்த்துத்தான் எனக்கு இவர் மீது காதலே வந்தது. ஷாரிக் நல்ல கணவர் மட்டுமில்லை நல்ல அப்பாவா இருக்கிறார். என் மகளை ஷாரிக்கின் வீட்டில் எப்படி ஏத்துப்பாங்க என்கிற பயம் இருந்தது ஆனால், அவங்க ஜாராவை அவங்களோட பேத்தியாகவே ஏற்றுக்கொண்டார்கள். இப்போ தான் அந்த பயமே போச்சு என்று மரியா அந்த பேட்டியில் பேசி இருந்தார். ஷாரிக் மற்றும் மரியா இவர்களின் திருமணத்தின் போது, அது வெறும் காதல் திருமணம் தான் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இவர்களின் பேட்டிக்கு பிறகு தான் மரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதும், மரியா ஷாரிக்கைவிட 3 வயது பெரியவள் என்பதும் அனைவருக்கும் தெரியவந்தது.
ரூ 25 கோடியில் பங்களா: இதைத்தொடர்ந்து மரியா யார் என்பதை இணையவாசிகள் தேடி வருகின்றனர். சென்னையில் பிறந்த மரியா பெற்றோர் பார்த்துவைத்தவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரித்துவிட்டனர். கணவரை பிரிந்த மரியா, தனது மகள் ஜாராவை எட்டு வருடமாக வளர்த்து வந்துள்ளார்.
மரியாவின் தந்தை பெரிய தொழில் அதிபர் என்றும் அவருக்கு 150 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஷாரிக்கிற்கு வரதட்சணையாக 25 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை கொடுத்து உள்ளதாகவும் அந்த வீட்டில் தான் தற்போது மரியாவும் ஷாரிக்கும் வாழ்ந்து வருவதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால், உண்மையில் ஷாரிக், மரியா மீது கொண்ட காதலால் தான் 8 வயதில் மகள் இருந்தும், தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று சில இணையவாசிகள் ஷாரிக்கிற்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











