Shariq Haasan: ஷாரிக் ஹாசன் - மரியா தம்பதியருக்கு வாரிசு வந்தாச்சு.. மகனை நெஞ்சோட அணைச்சுகிட்டாரே

சென்னை: பிரபல நடிகர்கள் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசன். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் காதலித்து வந்த மரியா ஜெனிஃபரை கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் கோலாகளமாக நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை ஷாரிக் ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான். இவரது மகனும் நடிகருமான ஷாரிக் ஹாசன் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென தனி அன்பையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். ஷாரிக் ஹாசன் , மரியா ஜெனிஃபர் ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்கள். மரியா ஜெனிஃபருக்கு ஷாரிக் ஹாசனை விட வயது அதிகம். மரியா ஏற்கனவே திருமணமானவர். மரியா ஜெனிஃபரின் முதல் திருமணத்தில் அவருக்கு மகள் உள்ளார்.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் தொடங்கி திருமணம் அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவர்களுடன் மரியாவின் முதல் குழந்தை இருந்தார். ஷாரிக் ஹாசன் மற்றும் மரியா ஜெனிஃபர் தம்பதியர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. ஏற்கனவே இவர்களின் காதல், திருமணம் குறித்து இணைய வாசிகளுக்கு பல ஆச்சரியங்கள் இருந்த நிலையில், இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

ஜோராக நடைபெற்ற வளைகாப்பு: திருமணம் எப்படி ஜோராகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றதோ, அதேபோல் வளைகாப்பும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக ஷாரிக் ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Actor shariq hassan Welcomes His Baby Boy With His Wife Maria Hassan Video Goes Trending
Photo Credit:

வாரிசு வந்தாச்சு: அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது மகனை நெஞ்சோடு அணைத்து வைத்துக் கொண்டுள்ளார். அதேபோல் தனது மகனின் கைகள் இவரது கையுடன் கோர்த்து இருப்பது போலவும் உள்ளது. அதேபோல் இவர் மகனை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இருக்கும் போது, அவரது மனைவி மகனின் காலுக்கு முத்தமிடுகிறார். இந்த வீடியோவுக்கு ஷாரிக் ஹாசன் " எனது வாழ்க்கையில் இருக்கும் சிறந்த அன்புக்குரியவளுக்கு சிறந்த பரிசைக் கொடுக்க நினைத்தேன். அதனாலோ என்னவோ என்னைப் போலவே ஒருவனைக் கொடுத்துள்ளேன். ஜூன் 28ஆம் தேதி நாங்கள் எங்களின் ஆண் குழந்தையை வரவேற்றோம்" என பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு இணையவாசிகளும் ரசிகர்களும் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் தாயும் சேயும் நலமா எனவும் நலம் விசாரித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X