Shariq & Maria: ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்ட ஷாரிக் & மரியா.. அச்சச்சோ என்னாச்சு.. பதைபதைத்த ரசிகர்கள்!

சென்னை: நடிகர் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடந்துள்ளது. தான் காதலித்த மரியா ஜெனிஃபரையே பெற்றோர் சம்மதத்துடன் ஷாரிக் திருமணம் செய்துள்ளார். 9 வயதான ஜாரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் மரியாவை குழந்தையுடன் திருமணம் செய்துள்ளார் ஷாரிக்.

இந்த திருமணத்தை ஷாரிக் செய்ததுடன், அவரது பெற்றோரும் ஜாராவை தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து முன்னதாக தனக்கு சந்தேகம் இருந்ததாகவும் ஆனால் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ் இருவரும் தன்னுடைய மகளுடன் மிகவும் நெருக்கமாக பழகுவதாகவும் மரியா தெரிவித்துள்ளார்.

instagram

ஷாரிக் & மரியா திருமணம்: நடிகர் ரியாஸ்கான் -உமா ரியாஸ் இருவரும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் காதல் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஷாரிக், படங்களில் நடிக்க முயற்சித்து வரும் நிலையில், இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காதல் திருமணம் நடந்துள்ளது. தான் காதலித்த மரியா ஜெனிஃபர் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் ஷாரிக் திருமணம் செய்துள்ளார். முன்னதாக மரியாவிற்கு 9 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், ஷாரிக்கை அந்த குழந்தை அப்பா என்றே அழைத்து வருகிறது.

மகளுடன் மரியா: இவர்களின் திருமணம் வெகு விமரிசையாக நடந்த நிலையில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு நேரில் வந்திருந்து வாழ்த்துக்களை பகிர்ந்தனர். தங்களின் திருமணத்தையடுத்து யூடியூபில் அடுத்தடுத்த பேட்டிகளை இந்த ஜோடி கொடுத்து வருகிறது. தங்களின் காதல், திருமணம், பெற்றோர் என அடுத்தடுத்த விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். தன்னிடமும் தன்னுடைய மகள் ஜாராவுடனும் ஷாரிக் மட்டுமில்லாமல் அவரது பெற்றோரும் எப்படி பழகுகின்றனர் என்பது குறித்து மரியா அடுத்தடுத்து உற்சாகத்தை பகிர்ந்து வருகிறார்.

ஷாரிக் & மரியா சிகிச்சை: இந்நிலையில் இன்றைய தினம் இந்த ஜோடி இணைந்து வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் இருவரும் அடுத்தடுதது ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டதை பார்க்க முடிந்தது. தங்களின் முகத்தில் இருந்த முகப்பரு உள்ளிட்டவற்றை போக்குவதற்காக ஐவி மற்றும் லேசர் ட்ரீட்மெண்ட்டை தாங்கள் எடுத்துக் கொண்டதாக இந்த ஜோடி தெரிவித்துள்ளனர். தற்போது தான் இந்த டிரீட்மெண்ட்டை எடுத்துக் கொள்ளும் இடத்தில் தன்னுடைய எதிர்பார்ப்பை மீறி ரிசல்ட் இருப்பதாகவும் ஷாரிக் கூறியுள்ளார். தற்போது தீபாவளி ஆஃபராக இந்த கிளீனிக்கில் அடுத்தடுத்த ஆஃபர்கள் உள்ளதாகவும் ஷாரிக்கும் மரியாவும் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து: ரசிகர்களுக்கு ஹேப்பி தீபாவளி என்றும் இவர்கள் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சிகிச்சையின்போது இவர்களுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும்வகையில் லேசர் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி ஆஃபரை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும்படி இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த தீபாவளி மக்களுக்குள் இருக்கும் சிறப்பானவற்றை வெளியில் கொண்டு வரட்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X