Shariq & Maria: மரியாவை மாமியார் கொடுமை செய்த உமா ரியாஸ்.. ஷாரிக் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸின் மகனான ஷாரிக் ஹாசன். இவருக்கு சமீபத்தில் மரியா ஜெனிபர் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நடிப்பில் ஆர்வம் கொண்ட ஷாரிக் ஜிவி பிரகாஷின் பென்சில் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து டான் படத்திலும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார்.
இதையடுத்து ஜிகிரி தோஸ்த், நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த ஷாரிக், தற்போது ரெசார்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று 49 நாட்கள் வரை நிகழ்ச்சியில் நீடித்த இவர் பின்பு எலிமினேட் ஆனார்.

ஷாரிக் & மரியா ஜோடி: நடிகர் ஷாரிக் ஹாசன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸின் மூத்த மகன். இவருக்கு சமீபத்தில் மரியா ஜெனிபர் என்பவருடன் திருமணம் நடந்தது. மரியாவிற்கு முன்னதாக திருமணம் நடந்து 9 வயதில் மகள் உள்ள நிலையில், இவர்களின் திருமணம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஷாரிக்கைவிட மூன்று வயது மூத்தவரான மரியாவை ஒரு ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்களின் திருமணம் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
மாமனார் -மாமியாருடன் பேட்டி: இவர்கள் இருவரும் யூடியூபில் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுதது வருகின்றனர். தன் மகள்மீது ஷாரிக் காட்டிய பாசம்தான் அவரை தனக்கு பிடிக்க காரணம் என்று மரியா பேட்டியொன்றில் கூறியிருந்தார். மறுமணம் செய்துக் கொண்டால் தன்னுடைய மகளை கணவர் குடுமபத்தினர் ஏற்க மாட்டார்கள் என்ற பயம் இருந்ததாகவும் ஆனால் ஷாரிக்கும் சரி அவரது பெற்றோரும் தன்னுடைய மகளை சிறப்பாக பார்த்துக் கொள்வதாகவும் ஷாரிக் சிறப்பான தந்தையாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய மாமனார் ரியாஸ் கான் மற்றும் மாமியார் உமா ரியாசுடனும் கணவர் ஷாரிக்குடனும் இணைந்து மரியா பேட்டி கொடுததுள்ளார்.
நினைத்தபடி மருமகள்: நிகழ்ச்சியில் பேசிய ரியாஸ்கான், ஷாரிக்கை புரிந்துக் கொண்டு செயல்படும் பெண்தான் அமைய வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் அதற்கேற்ப தற்போது மரியா அமைந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஷாரிக்கின் 22 வயதிலேயே ஏதாவது இருக்கிறதா என்று தான் அவரது காதல் குறித்து கேட்டதாகவும் இருந்தால் சொல்கிறேன் என்று அவர் கூறியதாகவும் ரியாஸ் கூறியுள்ளார்.ஆனால் தங்களின் திருமண தேதியை முடிவு செய்துவிட்டு அவர் தங்களிடம் கூறியது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுதததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த மரியா, 8 -8 நாள் வரும்வகையில் தங்களது திருமணத்தை திட்டமிட்டதால் இவ்வாறு நடந்ததாக தெரிவித்தார்.

சரியான பெண்ணை தேர்ந்தெடுத்த ஷாரிக்: இதையடுத்து பேசிய உமா ரியாஸ், தன்னுடைய விருப்பத்திற்கு தக்க ஷாரிக் சரியான பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தானும் ரியாசும் ஒருவருக்காக மற்றொருவர் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பது போல ஷாரிக்கும் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய மரியா, தனது பெற்றோருக்கு ஷாரிக்கை மிகவும்பிடிக்கும் என்றும் தனக்குதான் அந்த அளவிற்கு பிடிக்காது என்றும் காமெடியாக பேசினார். அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார்.
மாமியார் கொடுமை?: இதை சுட்டிக்காட்டிய உமா ரியாஸ், தமிழில் பேசுமாறு கூற, தன்னுடைய தமிழ் அந்த அளவிற்கு இருக்காது என்று கூறிய மரியா, மாமியார் கொடுமை செய்வதாகவும் விளையாட்டாக பேசினார். தொடர்ந்து ஷாரிக்கை காட்டிலும் தன்னுடைய மாமனார், மாமியாரிடம் தான் அதிக உரிமை எடுத்துக் கொள்வதாகவும் ஷாரிக் குறித்த எந்த புகாராக இருந்தாலும் முதலில் அவர்களிடம்தான் சொல்லுவேன் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய மாமனாரிடம் மரியாதை இருப்பது போலவே மாமியாரிடம் தோழியை போலத்தான் பழகுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











