Shariq & Maria: ஷாரிக் லவ்வையே சொல்லல.. நேரடியா அதுதான்.. மரியா பகிர்ந்த சீக்ரெட்!

சென்னை: நடிகர் ஷாரிக் பென்சில் படத்தில் தன்னுடைய என்ட்ரியை நடிகராக கோலிவுட்டில் கொடுத்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் கேரக்டர் ரோல்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் மரியா ஜெனிஃபர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

ஒன்பது வயது மகளுடன் வாழ்ந்து வந்த மரியாவை திருமணம் செய்துள்ளார் ஷாரிக். இவர்களது இந்த திருமணத்திற்கு ஷாரிக்கின் அப்பா ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் இவருவரும் ஒப்புதல் கொடுத்து எளிமையாக நடக்கவிருந்த திருமணத்தை கிராண்டாக நடத்தி முடித்துள்ளனர். இது இந்த திருமணத்தை மேலும் கவனம் பெற செய்துள்ளது.

shariq haasan maria jennifer tamil cinema


ஷாரிக் & மரியா திருமணம்: நடிகர் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸின் மூத்த மகன் ஷாரிக் ஹாசன் சில படங்களில் நடித்துள்ள நிலையில் அந்தப் படங்கள் பெற்றுக் கொடுக்காத பிரபலத்தை அவரது திருமணம் மிகப்பெரிய அளவில் பெற்றுக் கொடுத்துள்ளது. சமீபத்தில் மரியா ஜெனிஃபர் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் இந்த திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படியும் கிறிஸ்தவ முறைப்படியும் ஷாரிக் மற்றும் மரியாவின் திருமணம் நடந்த நிலையில் மரியாவிற்கு தாலி கட்டி தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொண்டார் ஷாரிக்.

Love at first sight movement: இவர்களின் ஜோடி அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் தங்களது திருமணம் குறித்தும் காதல் குறித்தும் தங்களுடைய பெற்றோர் குறித்தும், அடுத்தடுத்து இவர்கள் பேட்டிகளின்மூலம் பகிர்ந்து வருகின்றனர் இந்நிலையில் இவர்களின் சமீபத்திய பேட்டியில் மேலும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். ஜிம்மில் மரியாவை பார்த்தவுடன் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்று தனக்கு அவர் மீது காதல் பற்றிக் கொண்டதாக ஷாரிக் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் தங்களது காதல் குறித்து பல்வேறு கமெண்ட்கள் வெளியான நிலையில் அது குறித்து தனக்கு ஆரம்பத்தில் மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டதாக மரியா கூறியுள்ளார்.

காதலை கூறாத ஷாரிக்: ஆனால் அதை எப்படி எதிர்கொள்வது என்று ஷாரிக் தனக்கு தெரிவித்ததாகவும் மரியா கூறியுள்ளார். தான் ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் நிலையில் தன்னை பற்றிய பேட் கமெண்ட்களை அவள் கேட்கக்கூடாது என்று தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாக மரியா கூறியுள்ளார். தனக்கு மிகச்சிறப்பான கணவராக ஷாரிக் இருப்பார் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் தன்னை காதலித்தாலும் தன்னிடம் நேரடியாக வந்து தன்னுடைய காதலை ஷாரிக் கூறவில்லை என்றும் தன்னைப் பார்த்த ஒரே வாரத்தில் தன்னிடம் வந்து திருமணம் செய்து கொள்ள நினைப்பதாக அவர் கூறியதாகவும் மரியா தெரிவித்துள்ளார்.


தெளிவாக செயல்படும் ஷாரிக் & மரியா: தொடர்ந்து பேசிய ஷாரிக் திருமணத்திற்கு பிறகு தான் கர்ப்பமாகும் சூழலில் கர்ப்பமாகி விடுவேன் என்றும் அப்போது தன்னை விட்டு போய் விடுவாயா என்று கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு தங்களது குடும்பத்தினர் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட இவர்கள், தங்களது வாழ்க்கையை தாங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நண்பர்களோ குடும்பத்தினரோ இந்த வாழ்க்கையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதையும் தாங்கள் மிகத் தெளிவாகவே திட்டமிட்டதாகவும் கூறியுள்ளனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X